Politics
தோல்வியில் குஜராத் மாடல்! : அமெரிக்காவில் இருந்து பெருமளவில் நாடுகடத்தப்படும் குஜராத்தி மக்கள்!
இந்தியாவை கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தொடர்ந்து ஒரு மாநிலத்தை அதிக ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருக்கிறது என்றால் அது குஜராத் மாநிலம்தான்.
குஜராத் மாடல் என்ற கூற்றை வைத்து ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்த மோடி, குஜராத்தையும் வளர்க்கவில்லை, இந்தியாவையும் வளர்க்கவில்லை என்பதே தவிர்க்க முடியாத உண்மையாக ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டு வருகிறது.
அவ்வாறு வெளிப்படும் உண்மைகளுள் ஓர் முதன்மை உண்மையாக, அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என வெளியேற்றப்படும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அமைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட சட்டவீரோதமாக குடியேறிய இந்தியர்கள் 67,391 பேரில் 41,330 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தரவு, குஜராத் மாடலின் தோல்வியை கூடுதலாக வெளிப்படுத்தியுள்ளது.
அதிகப்படியான குஜராத் மாநில மக்கள் சட்டவிரோதமாக மற்ற நாடுகளுக்கு செல்வதற்கு காரணம், குஜராத் மாடலின் தோல்வியே!
குஜராத்தில் வேலைவாய்ப்புகளில் பற்றாக்குறை ஏற்படுவது ஒரு புறம் இருக்க; சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் நசுக்கப்படுவது அதிகரித்துவருவதும் அம்மாநில மக்களின் வாழ்வியலுக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
தனியார்மயமாக்கல் என்ற கொள்கையை முன்னெடுத்து மோடி முதல்வராக குஜராத்தை ஆட்சி செய்த 2004 - 2014க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 60,000 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்பதே, குஜராத்தின் தற்போதைய நிலைக்கு ஆணிவேராகவும் அமைந்துள்ளது.
இதுபோன்ற ஒரு மாடல் மீது பல புனைவுகளை பூசி, தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இது போன்ற பின்னணி கொண்ட ஒரு அரசு, எவ்வாறு இந்தியாவின் மாநிலங்களை வழிநடத்தும் என்பதற்கான விடை தான் கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பசி, பட்டினி தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. மாநில உரிமைகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அரசு உடைமைகள் மற்றும் அதிகாரங்கள் தனியார்மயமாக்கப்படுகிறது.
இதுபோன்ற வளர்ச்சியை வைத்துதான், ஆர்.எஸ்.எஸ்-ம் பா.ஜ.க.வும் பெருமைப்பட்டு கொள்கிறது. அதற்கு, உண்மையான வளர்ச்சி பெற்றிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த சிலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
முகவரி இல்லாதவர்களை வாக்காளர்களாக சேர்த்தது ஏன்? - தேர்தல் ஆணையர் விளக்கம் !
-
"அன்புமணி சோற்றுக்குள் பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்" - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் !
-
நாட்டிற்கே முன்னோடியான திட்டம்.. இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்.. தொடங்கி வைத்தார் முதல்வர்
-
தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!
-
”பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்கு சென்று கம்பு சுற்றுங்கள்” : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!