Politics
ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்திருக்கிற புதிய ஆயுதம் ‘ஆளுநர்’! : நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கிய நாடளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31ஆம் நாள் முதல் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2025-ல், பல்வேறு பழைய வரையறைகளே இடம்பெற்றுள்ளன என்றும், பெரும்பான்மை மக்களுக்கான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தேசிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இன்றைய (பிப்ரவரி 3) நாடாளுமன்ற கூட்டத்தில், மக்களவை தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி உரையாற்றினார்.
அப்போது அவர், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், ஒன்றிய அரசின் நிர்வாக திட்டமிடலுக்காகவும் மக்கள் தொகையை இந்திய அளவில் தென் மாநிலங்களே வெகுவாக குறைத்துக்காட்டி சாதித்தது. ஆனால் இதனையே காரணமாக காட்டி எங்கள் அதிகாரத்தை பறிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு அநீதியானது. அதனால் தான் நாங்கள் அதனை எதிர்க்கிறோம்.
இந்தியாவின் இரும்புக் காலம் 5,345 வருடங்களுக்கு முன் தொடங்கியதை எங்களின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது முற்றிலும் அறிவியல்பூர்வமான ஆய்வில் வெளிப்பட்டிருக்கும் உண்மை. எனினும் ஒன்றிய அரசு இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த உண்மையை புறக்கணிப்பதால் நீங்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. திராவிட நாகரிகத்தின் பெரும் பாரம்பரியத்திலிருந்து உங்களைதான் புறக்கணித்துக் கொள்கிறீர்கள்.
சிறுபான்மையினருக்கு எதிராகவும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் ஏராளமான திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவருகிறது. காங்கிரஸ் தலைவர் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தால் மட்டும் போதாது. வல்லபாய் படேலின் மதச்சார்பற்ற கொள்கைகளையும் ஒன்றிய பாஜக அரசு பின்பற்றவேண்டும்.
குடியரசுத் தலைவர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் மொழிபெயர்ப்பாளர் உதவி இன்றி அதை வாசிக்க முடியவில்லை. ஏனெனில் அத்தனை இந்தி மற்றும் சமஸ்கிருத வார்த்தைகள் திட்டங்களின் பெயர்களாகவும் விவரணைகளாகவும் இருந்தன. மொழிபெயர்ப்பில் கூட எங்களை சேர்க்க முடியாத நீங்கள் ஒற்றுமையை எப்படி பேச முடியும்?
பா.ஜ.க ஆட்சி அனைவருக்குமான ஆட்சி என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. திருக்குறளை மேற்கோள் காட்டுவதை தவிர, பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்த IT, CBI மற்றும் ED ஆகியவற்றை பயன்படுத்தி வந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தற்போது ஆளுநர் எனும் புதிய ஆயுதத்தை பயன்படுத்தி வருகிறது” என கண்டனம் தெரிவித்தார்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!