Politics
மாநில கட்சி அங்கீகாரம் : ”மக்களுக்கும், திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி” - திருமாவளவன் !
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்துள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக பரிமாணம் பெற்றுள்ளது. கடந்த கால் நூற்றாண்டுகளாக தேர்தல் களத்தில் இந்த இயக்கம் கடுமையான நெருக்கடியை கடந்து இந்த மகத்தான வெற்றியை எட்டி உள்ளது, இந்த அதிகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், உற்ற துணையாக இருந்த திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலமைச்சர் அவர்களை கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து திமுக ஒத்துழைப்புக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டோம். ஈரோடு கிழக்கு வெற்றிக்கு உற்றத் துணையாக நின்று பாடுபடுவோம் என்று முதல்வரிடம் பகிர்ந்து கொண்டோம்.யுஜிசி விதிகள் மாநில அரசுக்கு எதிராக உள்ளது. யுஜிசி வரைவு அறிக்கை ஆபத்தானது. இதற்க்கு இந்தியா கூட்டணி எதிர்வினை ஆற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். முதல்வருடனான சந்திப்பு சந்திப்பு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது.
ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிற., வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொள்வதுதான் அதிமுகவின் சிறப்பு. விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு தேர்தலை புறக்கணிக்கிறார்கள், இது பாஜகவின் நிலைப்பாட்டிற்கு ஒத்துழைப்பதற்காக அமையும்.
பாஜக அதிமுகவை வெளியில் தள்ளி பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்று காட்ட இது உதவுகிறது. அது எந்த வகையிலும் அதிமுகவுக்கு பயன் தராது. மக்களிடத்தில் இருந்த நன்மதிப்பு பாதிக்கப்படும். அதிமுகவின் சரிவுக்கான புள்ளியாக அமையும். இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது தான் நாட்டுக்கு நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால்தான் சனாதான சக்திகளை வீழ்த்த முடியும். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருவது சரி கிடையாது. அதனை முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று கூறினார்.
Also Read
-
“பேரா.வசந்தி தேவி திடீர் மறைவு கல்வித்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” - முதலமைச்சர் இரங்கல்!
-
“வேர்களைத் தேடி” - 14 நாடுகளிலிருந்து 99 தமிழ் இளைஞர்களின் ‘தமிழ் பண்பாட்டுப் பயணம்’ தொடக்கம்!
-
சென்னை IIT - தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்! : முழு விவரம் உள்ளே!
-
ரூ.18.12 கோடியில் சுற்றுலாத்துறைக்கு புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
திருவண்ணாமலை வளர்ச்சிக்கு... ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்