Politics

"நடிகர் விஐயை வீட்டில் இருந்தே அறிக்கையை கொடுக்க சொல்லுங்கள்" - அமைச்சர் சேகர் பாபு கிண்டல் !

சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற அலுவலகத்தில் கழகத் துணை அமைப்பு செயலாளரும் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினருமான தாயகம் கவி ஏற்பாட்டில் பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பகுதி பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், அனைத்து பாக முகவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் திருநாள் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் திருநாள் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " ண்ணாமலை கையில் எந்த விஷயமும் கிடைக்கவில்லை. வைகுண்ட ஏகாதேசி சமயத்தில் எங்கும் ஒரு சிறிய பிரச்சனை கூட ஏற்படவில்லை, பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு கட்டணம் கூட ரத்து செய்யப்பட்டது. அதேபோல் எதிர்தரிசனம் முற்றிலுமாக தடுக்கப்பட்டு யாராக இருந்தாலும் பொது வரிசையில் வந்து தான் பார்த்தசாரதி கோவிலில் தரிசனம் செய்ய ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் எந்த ஒரு தள்ளும் முள்ளும் இல்லாமல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் வைகுண்ட ஏகாதேசி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அண்ணாமலை கருத்தை பற்றி நாங்கள் கவலைப்படுவது கிடையாது, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அண்ணாமலை பேசி வருகிறார்.இந்த ஆட்சி ஏற்பட்ட பொழுது பாஜக சங்கீ கூட்டம் திமுக ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்று பறைசாற்ற நினைத்தார்கள். அதை அனைத்தையும் உடைத்து தகர்த்தெறிந்து தமிழ்நாடு முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அண்ணாமலை எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதால் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

அண்ணாமலை போன்ற அரசியலில் செல்வாக்கு இழந்து வரும் தலைவர்கள் ஏதேனும் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் அவர்கள் பேசப் பேச நாங்கள் இன்னும் வேகம் எடுப்போம். நடிகர் விஐயை வீட்டில் இருந்தே அறிக்கையை கொடுக்க சொல்லுங்கள். வெளியில் வந்துவிட வேண்டாம் என்று சொல்லுங்கள் அவரை வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்...

Also Read: பொங்கலன்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் !