Politics
ஒன்றிய பா.ஜ.க - மணிப்பூர் மாநில பா.ஜ.க இடையே மோதல்! : ஒன்றிய அரசிற்கு கெடு விதித்து தீர்மானம்!
மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாகியும் கலவரம் முடிவுறாமல் இருக்க யார் பொறுப்பேற்பது என்று ஒன்றிய பா.ஜ.க அரசிற்கும், மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ஜனநாயக உரிமையாற்றுவதில் முதன்மையாளர்களாக மணிப்பூர் மக்கள் இருந்து வந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாரமே பா.ஜ.க ஆட்சியில் இழக்க நேரிட்டுள்ளது.
இதனால், பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பாளர்கள் மணிப்பூர் மக்களிடம் இருந்தும், மணிப்பூர் மக்களின் நிகராளிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர்.
மணிப்பூர் பா.ஜ.க முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகள், போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஹசினா சொந்த நாட்டிலிருந்து ஆட்சி தோல்வி காரணமாக நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்தது போன்ற ஒத்த நிலை, மணிப்பூரிலும் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசின் தோல்வி ஆட்சியை மறைக்கவும், ஒன்றிய பா.ஜ.க.வின் தோல்வியை சுட்டிக்காட்டவும், மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தலைமையில் குழு கூடி, ஒன்றிய அரசுக்கு கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அக்கெடுவில், மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர விரைவில் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையேல், மக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!