Politics
”உணர்வுகளை தூண்டும் பேச்சுகளை அனுமதிக்க கூடாது” : பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளும் கூறி வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.அப்போது,சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.
இதற்கு நேற்று பதிலளித்த ஒன்றிய அமைச்சர்,”தன்னுடைய சாதி என்ன என்றே தெரியாதவர் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு கோருகிறார்” என வன்மத்தோடு விமர்சித்தார். அப்போது அவையில் இருந்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், ”சாதிவாரி கணக்கெடுப்பைப் பற்றி நான் பேசுவதால் பாஜகவினர் என்னை அவமதிக்கிறார்கள்.நீங்கள் விரும்பும் அளவுக்கு என்னை அவமானப்படுத்துங்கள். எவ்வளவு அவமானப்படுத்தினாலும், எனது இலக்கில் நான் கவனமாக உள்ளேன். ஆனால், மறந்துவிடாதீர்கள், நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே தீருவோம்” என ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ”ராகுல் காந்தியை அவமதிப்பதற்காக அனுராக் தாக்கூர் வேண்டுமென்றே கூறுகிறார். எல்லோருடைய சாதியையும் கேட்பார்களா. இது தவறு. இதை நான் கண்டிக்கிறேன்.எங்கு பேச வேண்டும், யாரை காக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி அறிந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, உணர்வுகளை தூண்டிவிட்டு பேசி வருகிறார். இதை நாடாளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது.” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!