Politics
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து சென்றிருப்பவர்கள் என சுமார் 500 பேரிடம், ‘இந்திய ஜனநாயகத்திற்கான இடம்’ (The Platform for Indian Democracy) எடுத்த கணக்கெடுப்பின் படி,
52% பேர் மோடிக்கு ஆதரவற்ற கருத்துகளை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக ஆண்களை விட, பெண்கள் மோடி மீது அதிகப்படியான அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பட்ட 500 பேரில், ஆண்கள் 50 விழுக்காட்டினரும், பெண்கள் 50 விழுக்காட்டினரும் இடம்பெற்றுள்ளனர். அதில், 18 - 44 வயதிற்குட்பட்டோர் 57 விழுக்காட்டினரும், இந்து சமூகத்தினர் 43 விழுக்காட்டினரும், பட்டதாரிகள் 62% விழுக்காட்டினரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களிடம், இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறதா என கேட்கப்பட்டதற்கு, 68% இந்து சமூகத்தினர் ஆம் என்றும், 73% இந்து அல்லாதவர்கள் இல்லை என்றும், 81% இஸ்லாமியர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் மதப்பிளவை உண்டாக்கும் வகையில் மோடி பேசுவது, இங்கிலாந்திலும் எதிரொலிக்கிறது என்றும் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கூட, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில், இந்து மற்றும் இஸ்லாமியர்களிடையே வன்முறை வெடித்ததை பெரும்பான்மையானோர் சுட்டிக்காட்டினர்.
இக்கணக்கெடுப்பில் மோடி அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு முக்கிய காரணங்களாக, இந்தியாவில் பெண்களுக்கு நேரிடும் அநீதி, மத பிரிவினை மற்றும் ஜனநாயக அச்சுறுத்தல் ஆகியவை அமைந்துள்ளன என்றும் பெரும்பான்மையானோர் பொதுவான பதிலை முன்வைத்தனர்.
இதன் வழி, இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும், ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான வேற்றுமை கருத்து வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர், மோடி இந்து சமூகத்தினரை தூக்கிப்பிடிக்கிறார் என்ற நினைப்பிலும், இஸ்லாமியர்கள் எதிர்வினையாளர்கள் என்ற நினைப்பிலும் இருக்கின்றனர் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது.
இல்லாத பல செய்திகளை, மோடியின் பொய் பேச்சுகள் முன்மொழிவதால், இந்தியாவை கடந்து, மற்ற நாட்டிலும் இந்து - இஸ்லாமியர்களிடையே வலுக்கும் எதிர்ப்புணர்வு, அச்சமூட்டுவதாக மாறியுள்ளது.
ஊடகங்களை தன் கையில் வைத்துக்கொண்டு, தான் பேசுவது தான் உண்மை என சித்தரிக்கும் மோடியின் செயல்பாடுகள், பலரை தவறாக வழிநடத்தும் செயலாகவும், இறையாண்மைக்கு எதிரான செயலாகவும், அரசியலமைப்பை குலைக்கும் செயலாகவும் இருப்பது, மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் பாசிச அரசியலை முன்னெடுக்கும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், மக்களும் ஒன்றிணைந்து தீர்வை காணும் வகையில், மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கான தீர்வு, வரும் ஜுன் 4 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!