Politics

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் LIC-யை தனியாருக்கு கொடுப்பதுதான் பாஜகவின் திட்டம் - செய்தி வெளியிட்ட Reuters !

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2021-ம் ஆண்டு அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, அரசிடம் இருந்த 3.5 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே9 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விற்பனையின்போது எல்.ஐ.சி.யின் பங்கு விலைகள் ரூ.902-949 என்ற கணக்கில் விற்கப்பட்டது. ஆனால், பங்குசந்தையில் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்ததால் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம், ரூ.5.48 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.59 லட்சம் கோடியாகக் குறைந்தது.

இந்த நிலையில், ஒன்றியத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எல்.ஐ.சி நிறுவனத்தில் மீதம் உள்ள அரசின் பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திரமிட்டுள்ளது.

அதன்படி இந்திய பொது காப்பீட்டு நிறுவனம் (General Insurance Corporation of India - GIC) மற்றும் லைப் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), ஹிந்துஸ்தான் ஜிங்க் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5700 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் : புறக்கணிக்கிறாரா ? புறக்கணிக்கப்படுகிறாரா ?