Politics
“நிர்மலா சீதாராமன் இவரது கேள்விகளுக்காவது பதில் அளிப்பாரா?” - அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்கு !
ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது. மேலும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட்களுக்கு நல்லது செய்வதாக கூறி, சாதாரண மக்களையும் பாஜக அரசு தண்டித்து வருகிறது.
அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்ச கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக மக்களை பலி கடாவாக மாற்றி, பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றிற்கான விலையை ஏற்றியுள்ளது பாஜக அரசு. இந்த மக்கள் விரோத அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பாஜகவின் வண்டவாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பாஜக அரசு அமைந்த பிறகு பொருளாதார ரீதியாக நாடு எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை புத்தக வாயிலாகவும் உலகறிய செய்துள்ளார். இந்த நிலையில், இதனை குறிப்பிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜின் பதிவு வருமாறு :
“ஒன்றிய நிதி அமைச்சரின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், சென்ற வருடம் The Crooked Timber of New India என்ற நூலை வெளியிட்டு பாஜக 9 ஆண்டுகளில் எப்படி நாட்டை நாசகுப்பையாக்கியது என்பதற்கு துறைவாரியாக புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு பாஜகவின் போலி தேசப்பற்றை தோலுரித்தார். இன்று வரை அந்த தரவுகளுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ எந்த மறுப்பும் பாஜகவிடம் இருந்து வெளிவரவில்லை.
தற்போது, அவர் பல நேர்காணல்களில் "மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் என்பதே இருக்காது" என்று கடுமையாக எச்சரித்து வருகிறார். இதற்கு நிர்மலா சீதாராமன் அவர்கள் பதிலளிக்காமல் இருப்பது, தனது கணவருக்கு ஏன் பதிலளிக்கவேண்டும் என்ற இறுமாப்பு காரணமெனில், குறைந்தபட்சம் ஒரு இந்திய குடிமகன், ஒரு பொருளாதார நிபுணர் என்ற அடிப்படையிலாவது பதில் அளிக்கலாமே! ஏன் வாய்திறக்கவில்லை?”
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!