Politics
பஞ்சாப் மாநில பாஜக வேட்பாளரை துரத்தியடிந்த விவசாயிகள் : கிராமங்களில் நுழைய விடாமல் பாஜகவுக்கு எதிர்ப்பு !
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பாஜக அரசின் கடும் எதிர்ப்புகளை மீட்டி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.
அந்த வகையில் ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் தற்போது தேர்தல் களத்திலும் எதிரொலித்துள்ளது. பாஜக ஆளும் ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட பாஜக வேட்பாளர்களை கிராமத்துக்குள் நுழைய விடாமல் விவசாயிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
பஞ்சாப்பின் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாஜகவினர் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்படுவதாக பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சாரத்துக்கு வந்த அவரை விவசாயிகள் துரத்தி அடித்தனர்.
பிரச்சாரத்துக்கு வந்த அவரின் வாகனத்தை சூழ்ந்துகொண்ட விவசாயிகள், கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அவர் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில் அவரின் வாகனத்தை விவசாயிகள் தாக்க முயன்றனர். இதனால் கடும் அச்சமடைந்த அவர், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு திரும்பினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!