Politics
ஒரே வாரத்தில் 3 மகா பஞ்சாயத்து... வட மாநிலங்களில் பாஜகவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்... கலக்கத்தில் மோடி !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் தங்கள் வேட்பாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த சூழலில் ராஜ்புத் சமூகத்தினர் குறித்து பாஜக ஆளும் குஜராத் ராஜ்கோட் தொகுதி வேட்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பர்ஷோத்தம் ரூபாலா பேசியதற்கு கண்டனங்களை, போராட்டங்களும் எழுந்தது. மேலும் அவரை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பாஜக அரசோ, அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததோடு, போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது.
இதனால் கொந்தளித்த ராஜ்புத் சமூகத்தினர், பாஜகவுக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளது. அதன்படி 400 தொகுதிகளுக்கும் தங்கள் சமூகத்தை சார்ந்தவர்களை வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் பாஜகருவுக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்றும் மகா பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவையனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களான, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் நடப்பவையாகும். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உ.பி-யில் 1 கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று உ.பி. மீரட்டில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை குஜராத்திலும் மகா பஞ்சாயத்து கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ராஜ்புத் சமூகத்தை இழிவாக பேசியது, தாகூர் சமூத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் கொடுக்காதது உள்ளிட்ட அனைத்திற்கும் பாஜகவை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்றும், பாஜகவுக்கு சமூக மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பாஜகவுக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!