Politics
எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் : பா.ஜ.கவின் தலையாட்டி பொம்மையாக மாறிய வருமான வரித்துறை!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கியது.
2018-19ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை 45 நாட்கள் தாமதமாகக் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்தால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் கடும் எதிர்ப்புகளுக்கு அடுத்து வங்கிக் கணக்கு விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமான வரி கணக்கை முறையாகத் தாக்கல் செய்யாததால், வட்டியுடன் அபராதமாக ரூ.1823 கோடி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பழைய pan cardஐ பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ததாகக் குற்றம்சாட்டி ரூ.11 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே, ”கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் வருமான வரித்துறையிடமிருந்து 11 நோட்டிஸ்கள் வந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. ED வேலை செய்யாதபோது, IT துறை பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் குறித்து அவநம்பிக்கையில் இருப்பதைத்தான் இது காட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்... விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன ?
-
பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... தமிழ்நாடு அரசின் அசத்தல் அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
‘சமூகநீதி விடுதிகள்’ : முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் வரவேற்பு!
-
சமூகநீதி விடுதிகள் : "முதலமைச்சரின் சிறந்த சமூக நீதி சமத்துவ சிந்தனை இது" - கே.பாலகிருஷ்ணன் பாராட்டு !
-
4 மணி நேரம் - 10 துறைகள் குறித்து ஆய்வு : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியது என்ன?