Politics
பாஜக விரும்பியவரை புதிய தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்துள்ளது- எதிர்க்கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் விமர்சனம்!
இதனிடையே பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. தன்னாட்சி அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியாக பயன்படுத்தி வருகிறது. மேலும், தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளையும் தங்கள் சார்பு அமைப்புகளாக மாற்றிவருகிறது.
கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஷிண்டே, அஜித் பவாருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சொந்தம் என்று கூறியபோதே தேர்தல் ஆணையத்தின் மீது சர்ச்சை எழுந்தது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் சாயம் வெளுத்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக செயல்பட்டு வந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு வரும் 2027-ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், திடீரென அவர் ராஜினாமா செய்தது, ஒன்றிய அரசின் முடிவை ஏற்க மறுத்ததால் அவர் ராஜினாமா செய்தாரா ? அல்லது அவர் ராஜினாமா செய்யும்படி ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்ததா என்ற கேள்வியை எழுப்பியது.
இந்த நிலையில், பாஜக விரும்பியவரை புதிய தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்துள்ளது என தேர்தல் தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளார். தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர் மோடி, பிரதமரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெறுவர் என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. இதனால் அவர்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த குழுவில் பிரதமர் மோடி, பிரதமரின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறியுள்ளார். தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒன்றிய பாஜக அரசின் உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் விரும்பியவரை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுத்தனர். புதன்கிழமை 212 வேட்பாளர்களின் பெயர்களை அரசாங்கம் அனுப்பியது. ஆனால், தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் 10 நிமிடத்துக்கு முன்பு 6 பேரில் பெயர்களை எனக்கு தெரிவித்தனர். அதில் இருந்து இருவரை தேர்ந்தெடுத்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!