Politics
மாணவர்களின் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யவேண்டும் - ஒன்றிய, மாநில பாஜக அரசை கண்டித்து மணிப்பூரில் பேரணி !
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி அங்கு மீண்டும் வன்முறையை பற்றவைத்தது.
இதனிடையே அங்கு வன்முறை காரணமான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் மாணவர்களின் படிப்பைத் தொடர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என மாணவர் அமைப்புகள் சார்பில் மணிப்பூரில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு தங்கள் கோரிக்கையை தெரியப்படுத்தினர்.
இந்த பேரணியின் போது, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பைத் தொடர ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்ற பதாகைகளை ஏந்தி மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர். இந்தப் பேரணியில் ஏராளமான பழங்குடி மாணவர்கள் கலந்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
-
“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!