மு.க.ஸ்டாலின்

“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

மேகதாது விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கும் முதலமைச்சர், இனியாவது காவிரி விவகாரத்தை ஆலோசனைகளோடு அணுக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பிடிவாதமாக கர்நாடாகாவில் தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என அந்த மாநில அரசு கடும் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக சென்று அம்மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், அவமானமே மிஞ்சியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரோ ”இப்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம். நாங்களே வேறு ஒரு தேதி சொல்கிறோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம்” என கூறிவிட்டார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.

நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories