Politics
“Modi Washing Powder மூலம் சுத்தம் செய்யப்பட்ட ஊழல்வாதிகள்...” - மோடிக்கு சத்தீஸ்கர் முதல்வர் பதிலடி !
தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் அவரவர் எதிர்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சித்திருந்தார். மேலும் ஊழல்வாதிகள் என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து ஊழல் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார். இந்த நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மோடிக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார். மோடி பேசியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பூபேஷ் பாகல் அளித்த பதில் பின்வருமாறு :
"ஊழல் குற்றவாளிகள் என்று குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது மோடி அவர்களே. சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் மீது மோடி முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு 'Modi Washing Powder' ஆல் சுத்தம் செய்யப்பட்ட அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா மற்றும் அஜித் பவார் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !