Politics
ராஜஸ்தான் தேர்தல் - சீட் கிடைக்காத விரக்தி : வீதிக்கு வந்த பா.ஜ.கவின் உட்கட்சி மோதல்!
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலைத் தொடர்ந்து மிசோரம், சத்தீஸ்கர், மத்திய, பிரதேசம் தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் படி ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பாஜக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதனிடையே பா.ஜ.க 41 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாதது கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் பா.ஜ.க தலைவர் முகேஷ் கோயலுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் இவர் அழும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இப்படி முன்னணி நிர்வாகிகள் பலருக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் பலரும் பா.ஜ.க தலைமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட பட்டியல் வெளியிட்டதற்கே இப்படி மோதல் வெடித்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிட்டால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க தலைமை விழிபிதுங்கி கிடக்கிறது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!