Politics

பாஜக MLA வீட்டை தாக்க முயன்ற கும்பல்.. எங்களால் சமாளிக்க முடியவில்லை என கடிதம் எழுதிய பாஜக மாநில தலைமை !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு கடந்த வாரம் காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும் காட்டில் இறந்த நிலையில் கிடக்கும் புகைப்படம் வெளியாகி மீண்டும் மணிப்பூரில் கலவர சூழலை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் அங்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டங்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளன, இந்த நிலையில், மெய்தி இன மக்கள் அதிகம் வாழும் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவரின் வீட்டை ஒரு கும்பல் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் இதுகுறித்த தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு வந்து அந்த கும்பலை தடுத்தனர்.

மேலும், மணிப்பூர் பாஜக தலைவர் சார்தா தேவி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, மணிப்பூரில் நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு மோசமான எதிர்ப்பை தாங்கள் எப்போதும் சந்தித்ததில்லை என கடிதம் எழுதியுள்ளார்.

Also Read: துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல்.. நாடாளுமன்றம் அருகே வெடித்த வெடிகுண்டால் பரபரப்பு.. 2 பேர் பலி!