உலகம்

துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல்.. நாடாளுமன்றம் அருகே வெடித்த வெடிகுண்டால் பரபரப்பு.. 2 பேர் பலி!

துருக்கியின் தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற கட்டிடம் அருகே குண்டுவெடிப்பு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியில் தற்கொலைப்படை  தாக்குதல்.. நாடாளுமன்றம் அருகே வெடித்த வெடிகுண்டால் பரபரப்பு.. 2 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

துருக்கியின் தலைநகர் அங்காராவில் பாராளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் கட்டிடம் அருகருகே அமைந்துள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு வாய்ந்த இடமான இந்த பகுதியில் இன்று காலை காலை பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மர்மநபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த துப்பாக்கிசூட்டில் இரண்டு போலீசார் காயமடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பை தற்கொலை ஆயுததாரி ஒருவர் நடத்தியதாகவும், அவரோடு வந்தவர் துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் தற்கொலைப்படை  தாக்குதல்.. நாடாளுமன்றம் அருகே வெடித்த வெடிகுண்டால் பரபரப்பு.. 2 பேர் பலி!

அந்நாட்டு நேரப்படி காலை 9:30 மணியளவில் பலத்த குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதனைத்தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து அறிந்ததும் உடனடியாக மீட்புப்படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்த நிலையில், மற்றொருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இந்த சம்பவத்தால் துருக்கியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories