Politics
“வெறுப்பு பேச்சுக்கு பரிசா?” அவதூறாக பேசிய பாஜக எம்.பி-க்கு பொறுப்பு வழங்கிய பாஜக : குவியும் கண்டனங்கள்!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில், சந்திரயான் 3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் தங்கள் உரையை நிகழ்த்தினர். அப்போது பாஜக எம்.பி பிற கட்சி எம்.பியை தரக்குறைவாக பேசினார்.
அதாவது பாஜக எம்.பியான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் பேசினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலி, பாஜக எம்பி அவ்வாறு பேசியதால், தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும், அது தன்னை மிகவும் பாதித்தது என்றும் கண்கலங்கி பேட்டியளித்தார்.
பாஜக எம்.பி பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது அவருக்கு பாஜக தேர்தல் பொறுப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளராக, ரமேஷ் பிதுரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள், இணையவாசிகள், பொதுமக்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலியை, தகாத வார்த்தைகளால் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதுரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25% இருக்கும் நிலையில், அங்கே பாஜக பொறுப்பாளராக பிதுரி நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் பலன்களுக்கான "வெறுப்பை" பாஜக அடையாளப்படுத்துகிறது!" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., "இது தெரிந்தது தான்.. ரமேஷ் பிதுரி, நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய எம்.பி.யை, தகாத வார்த்தைகளால் அழைத்ததற்கான வகுமதி. இப்படி பட்ட நபருக்கு பொறுப்பு வழங்கியுள்ளது தான், சிறுபான்மையினருக்கான நீங்கள் காட்டும் பாச யாத்திரையா?" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!