Politics

"முஸ்லிம்களுக்கு வேலை, வாடகைக்கு வீடு கொடுக்க கூடாது" -ஹரியானாவில் இந்துத்துவ கும்பலில் அடாவடி !

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறை ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலும் வன்முறை வெடித்துள்ளது. இந்த மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான் நடந்து வருகிறது.

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர்.

இந்த பேரணியில் வந்தவர்கள், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பியபடியே சென்றுள்ளனர். இவர்களது பேரணி குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் வந்தபோது, சிலர் தடுத்துள்ளனர். இதையே தங்களுக்குக் கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உடனடியாக மத வன்முறையில் இறங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வாகனங்கள், கடைகள், வீடுகளை அடித்து நொறுக்கித் தீவைத்துள்ளனர். மேலும் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மசூதியில் இருந்த இமாம் ஒருவரும் இந்துத்துவ கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்களை மீறி 700 பேருடன் இந்துத்துவ கும்பலின் ஆதரவோடு மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் இமாம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 7 நாட்களுக்குள் விடுதலை செய்ய வேண்டும். இந்துக்களின் பகுதியில் இருக்கும் மசூதி அகற்றப்படவேண்டும்,இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் எவருக்கும் வாடகைக்கு வீடு அளிக்கக் கூடாது. வேலைகளும் தரக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமாக இந்துத்துவ கும்பலால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த பஞ்சாயத்தில் கூடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Also Read: ராஜஸ்தான் : கூட்டு பாலியல் வன்கொடுமை.. தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி.. உடந்தையாக இருந்த பெண்கள் !