Politics
அன்றே கணித்தார் மண்ணாங்கட்டி.. 7 ஆண்டுகளுக்கு பின்னர் மோடியின் அறிவிப்பால் வைரலாகும் ட்வீட் !
கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கெனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது ராகுல் காந்தியின் பதிவில் மண்ணாங்கட்டி என்ற ட்விட்டர் கணக்கர் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி "1000 ரூபாய் நோட்டுக்களை 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றுவது எப்படி கருப்பு பணத்தை ஒழிக்கும்?"என ட்விட்டரில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரின் அந்த பதிவில், மண்ணாங்கட்டி என்ற ட்விட்டர் கணக்கர் ஒருவர் ", அந்த 2000 ரூபாய் நோட்டுக்களும் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படும்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னபடி தற்போது ரூ.2000 நோட்டுகளில் திருமபபெறப்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!