இந்தியா

முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: கர்நாடகாவில் அமைந்தது காங்கிரஸ் ஆட்சி

கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்.

முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: கர்நாடகாவில் அமைந்தது காங்கிரஸ் ஆட்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பா.ஜ.க 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பல தொகுதிகளில் டெப்பாசிட் இழந்தது. மேலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க தள்ளப்பட்டது.

முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: கர்நாடகாவில் அமைந்தது காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை அடுத்து கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே போட்டி நிலவியது. பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். மேலும் சோனியா காந்தியிடமும் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் கட்சி தலைமையிடம் தேர்வு செய்து அறிவித்தது.

முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: கர்நாடகாவில் அமைந்தது காங்கிரஸ் ஆட்சி
முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு: கர்நாடகாவில் அமைந்தது காங்கிரஸ் ஆட்சி

பின்னர் இன்று பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாக பதவியேற்றார். துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர், பிரியங் கார்கே, முனியப்பா, ஜமீர் அகமதுகான், கே.ஜே.ஜார்ஜ் ,ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜராகிகோலி ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, நிதிஷ் குமார், பூபேஷ் பாகல், பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அசோக் கேலாட், தேஜஸ்வி யாதவ், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories