Politics
வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக நடிகர்களை வைத்து வீடியோ எடுத்து வதந்தி.. RSS பிரமுகர் காவல்நிலையத்தில் சரண்!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
மேலும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலிஸார் கண்காணித்து இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த ருபேஷ் குமார் என்பவரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (24) என்பவரும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலியான வீடியோக்களை பகிர்ந்ததாக வழக்கு பதிவு செய்து, ஜார்க்கண்ட் சென்ற தனிபடை போலிஸார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே பீகார் மாநிலத்தை சேர்ந்த மணிஷ் காஷ்யப் செய்த போலி வீடியோ ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வரும் இவர் அதன்மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளார். தனது வருமானத்தை மேலும் கூட்டிகொள்ள தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வெளியான செய்தியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதற்காக பாட்னாவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இருவரை படுகாயம் அடைந்தது போல் வேடமிட வைத்து தமிழ்நாட்டில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைத்துள்ளார். மேலும் இந்த காட்சிகளை மார்ச் 8-ம் தேதி ஹோலி பண்டிகை அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் வெளிவந்ததும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீகார் போலிஸார், ராகேஷ் திவாரி என்பவரை கைது செய்தனர். மேலும், மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது பதிவு செய்யப்பட்டு அதில் இருவரை கைது செய்தனர், ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிஷ் காஷ்யப் தலைமறைவானார்.
இதனால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது பெட்டியாவின் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளது. மணிஷ் காஷ்யப் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று பீகாரின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி கூறியுள்ள நிலையில், மணிஷின் முன்னாள் நண்பரான நாகேஷ் சாம்ராட் மணிஷ் காஷ்யப் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் உடன் தொடர்புடையவர்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மணிஷ் காஷ்யப் 2020 இல் பீகாரில் உள்ள சன்பாடியா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி காலமானார்...
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !