இந்தியா

வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி.. தகவலை பயன்படுத்தி கொலை நாடகமாடிய ஒடிசா இளைஞர்.. காரணம் என்ன ?

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொலை நாடகம் நடத்திய ஒடிசா இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி.. தகவலை பயன்படுத்தி கொலை நாடகமாடிய ஒடிசா இளைஞர்.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதல்வர் மற்றும் தமிழக போலிஸார் உண்மை நிலையை வெளிப்படுத்தி பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், இந்த வதந்தியை பரப்பியவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி.. தகவலை பயன்படுத்தி கொலை நாடகமாடிய ஒடிசா இளைஞர்.. காரணம் என்ன ?

இந்த நிலையில், இந்த போலி தகவலை பயன்படுத்தி ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க போலியாக நடனமாடியது தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் பரியபடா கிராமத்தை சேர்ந்த சரத் பரிச்சா என்பவர் அந்த ஊரில் பலரிடம் கடன் வாங்கி அதனை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

அந்த தருணத்தில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக தகவல் பரவியுள்ளது. இதனைப் பயன்படுத்தி கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த அவர், ஊரிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் வேளைக்கு செல்வதாக கூறியுள்ளார். பின்னர் தமிழ்நாட்டில் தான் தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் இருப்பதாக ஊரில் இருப்பவர்களுக்கு வீடியோ காலில் தகவல் தெரிவித்துள்ளார்.

வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய வதந்தி.. தகவலை பயன்படுத்தி கொலை நாடகமாடிய ஒடிசா இளைஞர்.. காரணம் என்ன ?

பின்னர் அடுத்தநாள் தான் இறந்துவிட்டதாக தனது நண்பர்களை வைத்து புகைப்படம் எடுத்து அதை ஊரில் இருப்பவர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். அதன்படி ஒடிசா போலிஸார் தமிழக போலீஸாரிடம் இதுதொடர்பாக கேட்டபோது அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சரத்தின் மொபைல்போன் எண்ணை சோதித்தபோது அவர் மும்பையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் ன் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த சரத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கொலை நாடகம் நடத்திய உண்மை தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories