Politics

“கையில் ஆவணமும் இல்லை, மண்டையில் மூளையும் இல்லை” : அண்ணாமலைக்கு ‘பளார்’ பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி!

சென்னையில் மின்வாரியத்துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் மற்றும் உத்தரவை வழங்கி கூட்டத்தை நிறைவு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கனமழை காரணமாக மின் விநியோகம் தடைபெறாமல் கிடைக்க வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தயதன் பேரில் மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு மின்கம்பங்கள் சரிபார்க்கப்படுகின்றன.

மாவட்டம் வாரியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள், மின்சார வாரிய ஊழியர்கள் விழிப்புடன் இரவு நேரங்களிலும் சிறப்பு பணிகளில் ஈடுபட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைச்சராக பதவி ஏற்கும் போது சத்தியபிரமாணம் செய்துள்ளேன். இது வெளிப்படைத் தன்மையான ஆவணங்கள் அல்ல. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்கிறது.

அமலாக்கத்துறை அதிகாரியா அண்ணாமலை? தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை அமைப்பை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. அரசின் மீது அவதூறு பரப்புவது ஏற்புடையது அல்ல.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக்கட்டும் பதில் கூறுகிறேன். அண்ணாமலை கையில் எந்த ஆவணமும் இல்லை, அவர் மண்டையில் மூளையும் இல்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தாது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பினார்.

Also Read: “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்.. IPS படித்தாரா இல்லையா?” : அண்ணாமலை வெளுத்து வாங்கிய அமைச்சர்!