தமிழ்நாடு

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்.. IPS படித்தாரா இல்லையா?” : அண்ணாமலை வெளுத்து வாங்கிய அமைச்சர்!

அண்ணாமலை சங்பரிவார் நடத்துகின்ற பயிற்சி மையத்தில் படித்து ஏதோ ஒரு விதத்தில், ஐ.பி.எஸ் ஆகிவிட்டார் என்று தான் தோன்றுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்.. IPS படித்தாரா இல்லையா?” : அண்ணாமலை வெளுத்து வாங்கிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை திருவொற்றியூரில் டி.கே.பி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சிப் பாசறை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், “குஜராத் மாடலை விட தமிழ்நாடு மாடல் தான் சிறந்தது என்பது தெளிவாக உள்ளது. அண்ணாமலை போன்ற சில கிறுக்கர்கள் மீண்டும் அதே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்த்து விடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்.. IPS படித்தாரா இல்லையா?” : அண்ணாமலை வெளுத்து வாங்கிய அமைச்சர்!

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என மோடி அமித்ஷா கூட்டம் என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அந்த நிலை இல்லை. அதனால் எப்படி மாற்றுவது என்று அண்ணாமலை போன்ற படித்தவர்கள் ஆதாரமற்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

ஐ.பி.எஸ் படித்தாரா இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது. சங்பரிவார் நடத்துகின்ற பயிற்சி மையத்தில் படித்து ஏதோ ஒரு விதத்தில், ஐ.பி.எஸ் ஆகிவிட்டார் என்று தான் தோன்றுகிறது. அண்ணாமலை திரும்பத் திரும்ப ஒவ்வொரு நாளும் ஒரு பொய் சொல்லுகிறார். நான் சொல்வதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கவலையில்லை.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொய்.. IPS படித்தாரா இல்லையா?” : அண்ணாமலை வெளுத்து வாங்கிய அமைச்சர்!

இன்றைய தலைப்புச் செய்தியாக வந்தால் போதும். வன்முறை சக்திகளை பாதுகாப்பாக உங்களை காப்பாற்றுவோம் என்று கூறி பா.ஜ.க-விற்கு கொண்டு வந்து அதன் மூலமாக அந்தக் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.

அப்படி அவர்கள் முன்வைக்கின்ற வாதம் நாமெல்லாம் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வாதத்தை வைக்கிறார்கள். அந்த வாதத்தை உடைத்தெறிந்து அவர்கள் எவ்வளவு பொய்யானவர்கள் தீமையானவர்கள் என மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி இன்றைய இளைய தலைமுறையினரை தெளிவுபடுத்தி நம் பக்கம் அணிதிரள வேண்டியது இளைஞர் அணியினரின் கடமை. இளைஞர்களுக்கு முதலில் நாம் யார், நமது இயக்கத்தின் கொள்கை என்ன சாதனை என்ன என்பதை எடுத்துரைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories