தமிழ்நாடு

“இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்.. அந்தரத்தில் பறந்த இளைஞர்” : நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்!

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் அந்தரத்தில் தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

“இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்.. அந்தரத்தில் பறந்த இளைஞர்” : நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் வாலிபர் படுகாயம். விபத்தில் அசால்டாக நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனம் அந்தரத்தில் தூக்கி வீசும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் பெரியசாமி கோவில் தெரு பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபர் விஜய் நேற்று கன்னியாகுமரியில் இருந்து முருகன் குன்றம் வழியாக அகஸ்தீஸ்வரம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீலரில் வந்து கொண்டிருந்தார்.

“இருசக்கர வாகனம் மீது மோதிய சொகுசு கார்.. அந்தரத்தில் பறந்த இளைஞர்” : நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்!

அதேவேளையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் கன்னியாகுமரியை சுற்றி பார்த்துவிட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு நான்கு வழி கன்னியாகுமரி - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த விஜய் முருகன் குன்றம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையினை அசால்டாக கடக்க முயன்ற போது, நாகர்கோவில் சென்று கொண்டிருந்த முருகன் ஓட்டி வந்த சொகுசு கார் முருகன் குன்றம் அருகில் வைத்து திடீரென விஜய்யின் டூவீலர் மீது மோதியது.

இதில் விஜய் தனது டூவிலருடன் அந்தரத்தில் தூக்கி விசப்பட்டார். இந்த விபத்தில் விஜய்க்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் கார் டூ வீலர் மீது மோதி விஜய் தூக்கி விடப்படும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி போலிலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories