Politics
கொடநாடு மர்மம்: சரண்டராகத் தயார்; ஆனால் வீடியோ காலில் விசாரியுங்கள் - மேற்கு மண்டல ஐஜிக்கு நால்வர் மனு!
கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை வழக்கின் மறுபுலன் விசாரணை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு குறித்த புலன் விசாரணை தற்போது உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த தீபு, சந்தோஸ் சாமி, ஜித்தன் ஜாய் ஆகியோர் இவ்வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கூறிய வாக்குமூலத்தை பதிவு செய்யாமல் சிலரை காவல்துறையினர் தப்பிக்க வைத்த நிலையில் மறு புலன் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்களை வாக்குமூலமாக அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சம் இருப்பதால் தங்களை காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு மண்டல ஐஜி சுதாகருக்கு குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதோஷ் சாமி, ஜித்தன் ஜாய், சதீசன் ஆகியோரின் வழக்கறிஞர்கள் சார்பில் தபால் மூலம் மனு அனுப்பியுள்ளனர். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல உண்மை சம்பவங்கள் வெளிவரும் என இவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!