Politics
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் ஏர்கலப்பை பேரணியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு , முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங். தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசுகையில்,
“காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதால், அவர் பங்கேற்கும் ‘ஏர்கலப்பை பேரணி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளோம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்தும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளையும் சத்தியமூர்த்தி பவனில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரம் குறித்தும் பேசப்பட்டது. காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் இன்று நடைபெறவில்லை.
தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும், தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டது. இதுகுறித்து சோனியா காந்தி அவர்களிடம் தெரிவித்து. மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அடுத்தடுத்த நாளில் 2 துயரம்.. நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை... பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !
-
"வள்ளுவரை திருடப்பார்க்கிறர்கள், வள்ளுவரின் வெப்பம் அவர்களை பொசுக்கிவிடும்" - முதலமைச்சர் ஆவேசம் !
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!