Politics
“மொழி, சாதி, மதத்தின் பெயரால் வேற்றுமைகளை உண்டாக்க முயலவேண்டாம்” - பா.ஜ.கவுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது :
“இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்கும் என்று நேரு உத்தரவாதத்தை தந்தார். நேருவின் உறுதிமொழிக்குப் பின்னர் இந்தியாவில் மொழி பிரச்னை ஏற்படவில்லை.
மீண்டும் பொதுமொழி வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவது இந்திய மக்களிடத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும். நீண்ட காலமாக ஆங்கிலத்தைப் பேசி வருவதால் ஆங்கிலத்தை கற்றுக் கொள்வது தான் எளிது. ஆங்கிலத்தை கற்று கொள்பவர்கள் என்பதால் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது.
எந்த மொழியைக் கற்றுக்கொள்ள எளிதாக வாய்ப்பு உள்ளதோ அதைக் கற்றுக் கொள்ளலாம். பொது மொழி இல்லாமலும் இருக்கலாம். பொது மொழி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நவீன உலகத்தில் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.
பொது மொழி வேண்டும் என்ற கருத்து அரசியலைப் புகுத்திவிடுவதாக மாறிவிடும். மக்களிடத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும். இந்தியை விரும்பிப் படிப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், இந்தியை படித்தே தீரவேண்டும் என்றால் பிரச்னைகளும் எதிர்ப்பும் வரும். எதுவும் திணிக்கப்படக் கூடாது.
இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது. மக்கள் சுமூகமாக வாழ்கிறார்கள். மொழி, சாதி, மதத்தின் பெயரால் பா.ஜ.க-வினர் நாட்டில் வேற்றுமைகளை உருவாக்க வேண்டாம்.” என அவர் கூறினார்.
Also Read
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!