Politics

தனியார் கல்லூரிகளிலும் மாணவர் அரசியல் இயக்கங்கள் செயல்படலாம் : புரட்சிகர சட்டம் கொண்டு வருகிறது கேரள அரசு

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்பு செயல்பட முடியாத நிலை நிடித்து வருகின்றது. மாணவர்களின் உரிமையாகக் கருதப்படும் மாணவர் பேரவைத் தேர்தலைக்கூட நடத்தப்படுவதில்லை. கல்லூரிகளில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில் நிலைமை இப்படி இருக்க, கேரள மாநிலத்திலோ கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்புகள் சட்டபூர்வமாக செயல்பட வரைவு சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்ற கேரள அரசு சட்டத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களில் கூட இனி மாணவர்கள் அரசியல் அமைப்புகளாய் திரள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

சில கல்லூரிகளில் மாணவர் சங்கங்கள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படாமலும் மற்றும் ஒரு சில இயக்கத்தைச் சேர்ந்த அமைப்புகளால் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் நீடிக்கிறது. இதோடு கல்லூரி நிர்வாகத்தின் தலையீடும் இருக்கிறது. இவை அனைத்தையும் சரிகட்டவே இந்த சட்டம் உருவாக்கப்படுகிறது.

இந்த வரைவு சட்ட மசோதா நிறைவேற்றிய பின்பு, மாணவர் அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ததும், அவை மாநிலத்தின் அனைத்து கல்லூரி வளாகங்களிலும் செயல்பட அனுமதிககக்கூடும்.

வரைவுச் சட்டம் மாணவர்கள், புகார்களைத் தீர்ப்பதற்கான மாநில அளவிலான அதிகாரத்தையும் முன்மொழிகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி, ஓய்வுபெற்ற துணை வேந்தர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு தீர்வு காணும் குழுவாக செயல்படும். மாணவர்கள் வேண்டத்தகாத குற்றச்செயலில் ஈடுபட்டால் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கும் அபராதம் வசூலிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கையை மாணவர் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். இதன் மூலம் கல்லூரிக்காலம் முதலே மாணவர்கள் அரசியல் பழக வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் அரசியல்படுத்தப்பட வேண்டும் என்பதேயே பினராயி விஜயன் அரசும் விரும்புகிறது.