Politics
இள ரத்தங்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வாழ்த்து !
தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :
'' தி.மு.க.வில் இளம் இரத்தத்தை பாய்ச்சக் கூடிய, தமிழக இளைஞர்களை தி.மு.க பக்கம் ஈர்க்க கூடிய பொறுப்புகளை சுமக்க கூடிய பதவியாக இளைஞரணி செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பதவிக்கு திறமையும், தகுதியும் உள்ள சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்திருப்பது வரவேற்புக்குரியது.
அந்த புதிய பொறுப்பில் தி.மு.க.வின் தலைவர் அவர்கள் 32 ஆண்டுகாலம் அலங்கரித்த பொறுப்பில் அவரை போலவே இவரும் தமிழக இளைஞர்களுடைய அன்பை பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து தி.மு.க தலைவரோடு சேர்ந்து வெற்றிக்கு வித்திட்ட சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் '' ஈஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!