Politics
தமிழிசை கருத்துக்கு இந்த பாரதியார் வரிகள் பொருந்தும் : முத்தரசன் சாடல்!
தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கூறினார். இதற்கு தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது;
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஏப்ரல் 18 க்கு பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு காணாமல்போன பா.ஜ.க தலைவர் சகோதரி தமிழிசை அ.தி.மு.கவின் நிர்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் தி.மு.க-வின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க பரபரப்பு செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது. பொய் சொல்லியே தேர்தலில் வெற்றிபெற்று விடலாம். அது ஒன்றுதான் பா.ஜ.க.வின் மூலதனமாக இருக்கிறது, அதைத்தானே மோடியும் செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன் எடுத்ததையும், அதில் தி.மு.க தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் மீது முன் மொழிந்ததையும் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பா.ஜ.க.வோடு பின்வாசல் வழியாக பேசிவருவதாக தமிழிசை கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந்தெடுத்த பொய் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய “பொய் சொல்ல கூடாது பாப்பா” என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. என அவர் தெரிவித்தார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!