murasoli thalayangam
விஜய் எல்லாம் இத்தகைய ஜென்மம்தான் : அசிங்கத்தின் கையில் தமிழ்நாடு... முரசொலி கடும் தாக்கு!
முரசொலி தலையங்கம் (09-09-2026)
தரங்கெட்ட விஜய்!
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை எத்தனையோ முதலமைச்சர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் சிலர் மீது அரசியல் ரீதியான, கொள்கை வழிப்பட்ட விமர்சனங்கள் நமக்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் தரங்கெட்ட முதலமைச்சர் என்றால் இப்போது இருக்கும் விஜய்தான். கோட்டையை ஒரு அசிங்கத்தின் கையில் கொடுத்துவிட்டு தமிழ்நாடு அவமானப்பட்டு நிற்கிறது.
அசிங்கமான படங்களில் நடித்து, அருவெறுப்பான காட்சிகளில் நடித்து, ஆபாசத்தையே மூலதனம் ஆக்கி ஹீரோவா ஆனவர் என்பதால் அதையே அரசியலிலும் அரங்கேற்றுகிறார் விஜய். அவரவர் புத்தி அவரவர் பேச்சில் தெரியும் என் பார்கள். அதைத்தான் ஒவ்வொரு நாளும் மெய்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கிறார் என்பதால் நமக்கு கோபம் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் விமர்சனத்தால் வளர்ந்த இயக்கம். திட்டத் திட்டத்தான் தி.மு.க. அதிகமாக வளரும். அப்படித்தான் வளர்ந்து வருகிறது. இதுவரை தி.மு.க.வை, அதன் கொள்கை பிடிக்காமல் திட்டியவர்கள் கூட, தி.மு.க.வின் தியாகத்தை கொச்சைப்படுத்த மாட்டார்கள். ஆனால் முதன்முதலாக தியாகத்தைக் கொச்சைப்படுத்தி விஜய் பேசி இருக்கிறார். ஏனென்றால் அவர் தியாகம் செய்து வளர்ந்தவர் அல்ல. அவர் செய்த தியாகம் என்பது தனது மானத்தை விலை பேசி விற்றதுதான். விலைக்கு ஏற்ற வகையில் மானத்தை கூவிக்கூவி, கூறுபோட்டு விற்றவர் அவர்.
"மானமுள்ள ஆயிரம் பேரிடம் சண்டையிடலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒருவனிடம் சண்டை போட முடியாது' என்பார் தந்தை பெரியார். விஜய் எல்லாம் இத்தகைய ஜென்மம்தான்.
மனைவி விவாகரத்து கேட்டார். இது வழக்கமாய் குடும்ப நல நீதிமன்றங்களில் நடக்கும் விவகாரங்களைப் போல அல்ல. ‘என் கணவருக்கு இன்னொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது.'என்றார். இதற்கு கணவர் விஜயின் ரியாக்ஷன் என்ன? ‘இதெல்லாம் அந்தளவுக்கு வொர்த் இல்லை' என்பதுதான். இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்தால் மானஸ்தன் செய்ய வேண்டியதை விஜய் செய்யவில்லை. ஒரு நடிகையை அழைத்துக் கொண்டு பொது நிகழ்ச்சிக்கு வந்தார். இதுதான் விஜயின்தரம் ஆகும்.
நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தங்குவதற்கு எனக்கு அனுமதி வேண்டும் என்று மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்தார். தன்னோடு மனைவி தங்குவதற்கு கூட அனுமதி தராதவர்தான் விஜய்.
சர்க்காரியா கதை அனைவருக்கும் தெரியும். புகார் கொடுத்தவரே ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் பொதுவாழ்க்கையில் இயல்பானதுதான். அதற்காக, 'எங்க உங்கப்பாவையே காணோம்' என்று கேவலப்படுத்தி விஜய் பேசியதை, 'அப்பாவிடம் இருந்து விலகி இருக்கும்’அவரது இரண்டு பிள்ளைகளும் பார்த்து என்ன நினைத்திருப்பார்கள்? 'இப்படிப் பேச இவருக்கு என்ன அருகதை' என அவர்களுக்குள் பேசி இருக்க மாட்டார்களா?
கண்ணதாசன் எழுதினாராம். இந்த நொண்ண தாசன், சட்டமன்றத்தில் மேற்கோள் காட்டுகிறார். கண்ணதாசன் எழுதிய‘உள்ளும் புறமும்’புத்தகத்தை மேற்கோள் காட்டத் தைரியம் உண்டா விஜய்க்கு?‘அரங்கமும் அந்தரங்கமும்’என்று கண்ணதாசன் ஒரு கதை எழுதினார். அரசியல்வாதி ஆகிவிடும் நடிகர் ஒருவரின் நடவடிக்கைகள் மொத்தமாக அதில் இருக்கும். புட்டுப் புட்டு வைத்திருப்பார் கண்ணதாசன். இந்த நூறு நாட்களுக்கு அப்படியே பொருந்தும். அதையே பாடமாக வைத்துக் கொண்டு ஆட்சி கூட நடத்தலாம்.
அசிங்கமான கவர்ச்சியால் ஹீரோ ஆகி, அதையே அரசியலிலும் புகுத்தி, பொய்யான வீடியோக்களை துணை நடிகைகளைப் பேச வைத்து எடுத்து பரப்பி, அதையும் நம்ப வைத்து, இறுதியாக குழந்தைகளை மெஸ்மரிஷம் செய்து வீட்டில் அடம்பிடிக்க வைத்து வாக்குகளைத் திருடி அரைகுறை வெற்றியைப் பெற்று, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அமைச்சர் பதவி தந்து வளைத்து பல்வேறு குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆன விஜய்க்கு முதலில் தேவை நாவடக்கம்.
மண்டபத்தில் எழுதித் தருகிறவர்கள் எதையும் எழுதுவார்கள். மாட்டிக் கொள்ளப் போவது விஜய்தான். அவர் இப்போது சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும், எழுத்துக்கும் அவர்தான் வாழ்நாளில் பொறுப்பேற்க வேண்டும். ‘நாவினால் சுட்ட வடு மாறாது'. அந்த வடு, விஜய்யை வறுத்தெடுக்கும். அவருக்கு உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா? என்றுதான் கேட்க வேண்டி உள்ளது.
சினிமாவில் பிழைக்கும் போது கலைஞர் குடும்பம் தேவைப்படுகிறது. கலைஞருக்கு சிலை வைப்பேன் என்பது. 'உதயநிதி, தயாநிதி, கலாநிதி... எல்லாம் பெயர்கள் அல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைட்டில்' என்று சொன்னதும் இதே விஜய் தான். முரசொலி மாறன் தபால் தலையை பிரதமர் மன்மோகன் வெளியிட பெற்றுக் கொண்டவர் விஜய். அதாவது தனக்கு ஆதாயம் எந்த நேரத்தில் எதுவோ அதற்கு தலையாட்டி வந்துள்ளார் விஜய். இதற்கு வேறு மாதிரியாகத்தான் பெயர் வைக்க வேண்டும்.
சட்டசபை மாண்பைக் குலைத்துவிட்டார், அவை மரபுக்கு எதிராகப் பேசு கிறார் என்று இதனை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. மாண்பு இல்லா தவர் கையில் அதிகாரம் போனால், மாண்பு தெரியாதவர் கையில் பதவி போனால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் விஜய் பேச்சு.
Also Read
-
மாணவர்களின் அயல்நாட்டு கல்விக் கனவு சிதைக்காதே : த.வெ.க அரசுக்கு SFI கண்டனம்!
-
“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட்டா” : முதல்வர் விஜய்க்கு இ.பரந்தாமன் கடும் கண்டனம்!
-
“சட்டப்பேரவை மரபை மீறுகிறார் சபாநாயகர்.. திமுக மீதான அரசியல் தாக்குதல்” : எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!!
-
“முதலமைச்சரின் ‘மிசா’ பேச்சு, உடல்மொழி அநாகரிகமானது” : விஜயிக்கு கே.பாலகிருஷ்ணம் கடும் கண்டனம்!
-
‘சர்க்காரியா கமிஷன்’ - சட்டசபையில் அன்றே பதில் அளித்த கலைஞர்! (முழு தகவல்)