murasoli thalayangam
தமிழ்நாட்டில் பாஜக முழுமையாகப் புதைக்கப்பட்டு விட்டது என்று எழுதினார்களா : நாளிதழ்களுக்கு முரசொலி கேள்வி!
முரசொலி தலையங்கம் (08-05-2026)
இது சரிவு அல்ல..
‘திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது' என்ற பொருளில்சில நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுவதைப் பார்க்கும் போது, அவர்களது ஆயிரங்காலத்து வன்மம் வெளிப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் பேரவைத் தலைவராகவும், அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த மரியாதைக்குரியசி. பா.ஆதித்தனாரின் ‘தினத்தந்தி'யுமா இப்படி எழுதி பெருமைப்பட வேண்டும்?
அனைத்து வகையிலான ஆதிக்கத்துக்கும் எதிரான இயக்கம், திராவிட இயக்கம். ஆதிக்கச் சக்திகளும், அத்தகைய எண்ணங்களும் கொண்டவர்கள் கோலோச்சும் காலம் வரையில் திராவிட இயக்கம் இம்மண்ணில் இருக்கும். யாருக்கும் சந்தேகம் வேண்டாம்! அற்பத்தனமான மகிழ்ச்சிகளும் வேண்டாம்!
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு தேர்தல் வெற்றியால் வளர்ந்த கட்சியும் அல்ல. ஒரு தேர்தல் தோல்வியால் முடிந்து போகப் போகும் கட்சியும் அல்ல.
1957 ஆம் ஆண்டு முதல் முறை போட்டியிட்ட தேர்தலில் 15 இடங்களைக்கைப்பற்றியது கழகம். அடுத்து 1962 தேர்தலில் 50 இடங்களைக் கைப்பற்றி சட்டமன்ற எதிர்க்கட்சியாக உயர்ந்தது. 1967 தேர்தலில் 137 இடங்களைக் கைப்பற்றி முதல்முறை ஆட்சியைக் கைப்பற்றியது கழகம்.
1967, 1971, 1989, 1996, 2006, 2021 என ஆறு முறை ஆட்சி அமைத்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 என ஏழு முறை எதிர்க்கட்சி வரிசையில் செயல்பட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
இவைதான் அரை நூற்றாண்டு தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு ஆகும். வெற்றி, தோல்விகளால் அளவிடப்பட்டது அல்லது கழகம்.
தி.மு.க. என்பது எப்போதும் காவல் அரண். காவலுக்கு நிற்பவன், தமிழ்நாடு என்ற கோட்டையையும் காப்பான். கோட்டையை அழிக்கத் துடிக்கும்சக்திகளையும் வீழ்த்துவான். இந்த இரண்டு செயல்களையும் காவல் அரணாம்கழகம் செய்யும். இதைத்தான் காலம் காலமாக கழகம் செய்து வருகிறது.
திரைக்கவர்ச்சியை உண்மையென நம்பி, ‘தாங்கள் என்ன செய்கிறோம்' என்பதே தெரியாமல் விஜய் கட்சிக்கு வாக்குகள் அதிகம் ஆகி இருக்கிறது. அவரது அரசியலுக்காக அல்ல. அவரது கொள்கைக்காக அல்ல. தி.மு.க.வுக்கு எதிராக அல்ல. கழக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை என்பது இல்லை. நமது வேட்பாளர்கள், பரப்புரை போன இடத்தில் எங்கும் தடுக்கப்படவில்லை. எதிர்ப்புகள் இல்லை. இருப்பினும் விஜய் கட்சி அதிக வாக்குகளை வாங்கியது என் - றால், அதற்கு அவரது சினிமா புகழ் மட்டுமே காரணம் ஆகும். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆகி இருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் 25 ஆண்டுகளாக இருப்பவர். அந்த பிம்பம் ஒன்றே அவருக்கு விழுந்த வாக்குகள் ஆகும்.
விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தென்காசி, நீலகிரி, நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விஜய் கட்சி வெற்றி பெற முடியவில்லை. எங்கே போனது அவரது செல்வாக்கு?
பள்ளி விபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. விஜய் கட்சியானது தி.மு.க. கூட்டணியை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணிக்கும் விஜய் கட்சிக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே!
27 தொகுதிகளில் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
*திருப்பத்தூர் –1
*கன்னியாகுமரி –214
*போளூர் - 227
*பரமத்தி வேலூர் – 308
*கும்பகோணம் - 679
*கம்பம் - 751
*கள்ளக்குறிச்சி - 798
*உதகை -976
*ஸ்ரீவைகுண்டம் – 1188
*அந்தியூர் – 1260
*மணப்பாறை - 1426
*பழனி – 1452
*மானாமதுரை – 1354
*கரூர் –1554
*மன்னார்குடி-1566
*உசிலம்பட்டி - 1805
*ஏற்காடு - 2189
*மொடக்குறிச்சி - 2430
*புவனகிரி - 2487
*திருவாடானை – 2513
*சேந்தமங்கலம் – 2655
*சோழவந்தான் – 2678
*லால்குடி - 2739
*நிலக்கோட்டை - 2925
*பெண்ணாகரம்– 3165
*கிருஷ்ணராயபுரம் - 3617
*அரூர் - 3329
- இப்படி மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது தி.மு.க. கூட்டணி.
“திராவிடக் கட்சி ஆட்சி முடிந்துவிட்டது' என்று எழுதும் நாளிதழ்கள், பிரதமர்மோடியின் பா.ஜ.க. எத்தனை இடங்களில் வென்றுள்ளது என்பதைப் பட்டியல் போட்டு, ‘பா.ஜ.க. முழுமையாகப் புதைக்கப்பட்டு விட்டது' என்று எழுதினார்களா என்றால் இல்லை.
27 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., உதகமண்டலம் தொகுதியில் மட்டும் வென்றுள்ளது. அதுவும் 976 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றுள்ளது. மற்ற பா.ஜ.க. தலைகள் அனைத்தும் வீழ்த்தப்பட்டுள்ளது.
முந்தைய தேர்தலில் 4 இடங்களில் வென்ற பா.ஜ.க., இப்போது அதில் மூன்று இடங்களை இழந்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அல்லவா?
Also Read
-
“துரோகம் செய்து முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சி!” : திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்!
-
மக்களுக்கு நன்றி.. தலைவருக்கு அதிகாரம்.. : தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! (முழு விவரம்)
-
“விஜய் ஆட்சியமைக்க தி.மு.க எந்த இடையூறும் செய்யாது” : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
-
“பிரதமர் மோடிக்கு எப்போதும் அஞ்சாத தலைவர்கள்” : முரசொலி தலையங்கம்!
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”