murasoli thalayangam

நயினார் நாகேந்திரனின் பொய் பரப்பல்! : திராவிட மாடலின் மத நல்லிணக்கத்தை விளக்கிய முரசொலி தலையங்கம்!

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், "மதச்சார்பின்மை என்னும் தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கலையத் தொடங்கி விட்டது" என்று சொல்லி இருக்கிறார். "கந்தர் மலையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்துவிட்டது. சிக்கந்தர் தர்க்காவில் சந்த னக் கூடு திருவிழா நடத்த அனுமதித்துள்ளது” என்ற பொய்யைச் சொல்லி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு விட்டது. பா.ஜ.க. சொல்லும் இடத்தில் எல்லாம் தீபம் ஏற்ற முடியாது.

கார்த்திகை தீபம் அன்று திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் காலம் காலமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 3.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வழக்கப்படி திருக்கோ விலுக்குள் பால தீபம் ஏற்றப்பட்டது.

அதன்பிறகு அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக் கூடிய உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீப மண்ட பத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடு ஆகி, பதினாறு கால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கப்பான் ஏற்றி சுவாமிக்கு சாத்தப்பட்டது. இவை முறையாக நடந்தது. இது பக்தர்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், வழக்கமான இடத்தை மாற்றி, வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு கும்பல், உள்நோக்கத்தோடு பல காலமாகச் செயல்பட்டு வந்தார்கள்.

மலைப்பகுதியில் இருக்கும் தர்காவுக்கு அருகில் இருக்கும் தூணில் தீபம் ஏற்றுவதன் மூலமாக இரு மதப்பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கி, அதன் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தப் பார்த்தார்கள். இதனை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. கலவரம் ஏற்படுத் தப் பார்த்தவர்கள் நினைப்பில் மண்ணைப் போட்டு விட்டது தமிழ்நாடு அரசு. அந்த எரிச்சலில்தான் நயினார் நாகேந்திரன் பேசி இருக் கிறார்.

அதே டிசம்பர் 3ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற காட்சியை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தார்கள். இலட்சக்க ணக்கான பக்தர்கள் நேரில் சென்று தீபக் காட்சியை பார்த்தார்கள். உண்மையாக நயினார்நாகேந்திரன் போன்றவர்கள் இதனைத்தான் பாராட்டி இருக்க வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சியில் 3,177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இது எந்த ஆட்சியிலும் நடக்காத சாதனை ஆகும். 997திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7 ஆயிரத்து 701 கோடி மதிப்பீட்டிலான7,655.75 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவும் எந்த ஆட்சியிலும் நடக்காத சாதனை ஆகும். 2 லட்சத்து 03 ஆயிரத்து, 444 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ஆயிரம் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

12,876 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மாநில ஆலோசனைக்குழு அனுமதி அளித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழ மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் 425 கோடி ரூபாய் மானியம் வழங்கப் பட் டுள்ளது. ஆதி திராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள 5 ஆயிரம் கோவில்கள், கிராமப்புறத்தில் உள்ள ஆயிரம் கோவில் திருப்பணிக ளுக்கு நிதி உதவி அளித்துள்ளோம். ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்க ளுக்கும். அறுபடை வீடுகளுக்கும். இராமேசுவரத்திலிருந்து காசிக்கும் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட ஆயிரக் கணக்கான மூத்த குடி மக்கள் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அரசு நிதியில் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தினை செயல்படுத்தி இதுவரை 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. இவ்வரசு பொறுப்பேற்ற பின் 12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஒது வார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டம் 295 திருக்கோயில்களில் செயல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின் ஒருகால பூஜைத் திட்டத்தில் பயன்பெற்று வந்த திருக்கோயில்களின் வைப்பு நிதி ரூபாய் ஒரு இலட்சத்தி லிருந்து ரூ.2 இலட்சமாகவும், தற்போது ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, 18,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. ஒருகால பூஜைத் திட்டத்திலுள்ள 18,000 திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு இவ்வரசு பொறுப் பேற்றபின் முதல் முறையாக மாதந்தோறும் ரூ.1,000/- மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஒருகால பூஜைத் திட்டத்தில் பயன்பெறும் திருக்கோயில் களின் அர்ச்ச கர்களின் பிள்ளைகளின் நலன்கருதி அவர்களின் மேற்படிப்புக்காக கடந்த இரண்டாண்டுகளில் தலா ரூ.10,000/- வீதம் 900 மாணவர்க ளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 30 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு 935 நபர்கள் பயன்பெற்றுள்ளனர். திருக்கோயில்க ளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,342 பணியாளர்கள் பணிவரன் முறைப்படுத்தப் பட்டுள்ளனர். நயினார்கள் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாது. ஆனால் உண்மையான பக்தர்களுக்கு இது தெரியும். அவர்களுக்கு திராவிட மாடல் ஆட்சி பற்றியும், முதலமைச்சர் பற்றியும் புரியும்.

எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை நேற்றைய தினம் வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள், திராவிட மாடல் ஆட்சியானது அனைவருக்குமான ஆட்சியாக எப்படி நடைபெற்று வருகிறது என்பதை மிகச் சிறப்பாக விளக்கினார்.

“கடந்த வாரம் விமான நிலையத்திற்கு எதிரே உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு நான் அடிக்கல் நாட்டினேன். அடுத்த சில நாட்களில் மனிதநேய மகத்துவத்தைச் சொல்கிற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றேன். மறுநாள் திருநெல்வேலி மாவட்ட அரசு விழாவில் நெல் லையப்பர் திருக்கோயில் வெள்ளித் தேர் ஜனவரி மாதம் முதல் மீண்டும் ஓடும் என்று அறிவித்தேன். இதுதான்திராவிட மாடல். இதனால் தான் நம்மை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்” என்று முதலமைச்சர் சொன்னதில் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

'கார்னர்' செய்பவர்கள் தான் காணாமல் போவார்கள்.

Also Read: ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்