murasoli thalayangam
”ஆளுநர் அவர்களே கொஞ்சம் பாரதியாரின் இந்தப் பாடல்களைப் படியுங்கள்”.. பாடம் எடுத்த முரசொலி!
முரசொலி தலையங்கம் (10- 06- 2023)
பாரதியார் பாடல்களைப் படிக்கவும்!
மாநிலங்களுக்கு தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள்– எனில்
சிந்தனை ஒன்றுடையாள்.
மாநிலங்களுக்குத் தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்!
கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!
மாநிலங்களுக்கு தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன் தன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்
கன்னடர் ஒட்டிய ரோடு – போரில்
காலனும் அஞ்சக் கலங்கும் மராட்டர்
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடை யார் இந்துஸ்தானத்து மல்லர்
மாநிலங்களுக்கு தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
மாநிலங்களுக்கு தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம்– இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
மாநிலங்களுக்கு தனிப்பட்ட எந்தப் பண்பாடும் இல்லை என்று சொல்லும் ஆளுநர் அவர்கள், பாரதியாரின் இந்தப் பாடலைப் படிக்கவும்!
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!