முரசொலி தலையங்கம்

”தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கலைஞரின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்”.. முரசொலி!

மாநிலத்தை வளர்த்தெடுத்த தலைவருக்கு நானிலம் போற்றும் நன்றிநவிலும் விழாக்களாக அமையட்டும்.

”தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கலைஞரின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்”.. முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09-06-2023)

நமது நன்றியின் அடையாளங்கள்!

'ஊர் உறங்கும் வேளையிலும் உள்ள முறங்காதான்

யார் மயங்கு போதினிலும் தான் மயங்கலில்லான்

சீர் விளங்கும் வீரர் புவிப் போர்விளங்க வந்தான்

வீரன் கருணாநிதி எவ்வூரிலுமெழுந்தான்!” - என்று தமிழினத் தலைவர் கலைஞரைப் பற்றி எழுதினார் கவியரசு கண்ணதாசன்!

அத்தகைய தமிழினத் தலைவர் கலைஞருக்கு சூன்- 3 பிறந்த நாள். அதுவும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டு. கடந்த 3 ஆம் தேதி கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 280க்கும் மேற்பட்டவரை பலிவாங்கியது. நூற்றாண்டு விழாவையே தள்ளி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'அதனைத்தான் மனிதநேய மாண்பாளரான தலைவர் கலைஞர் அவர்களும் விரும்பி இருப்பார்' என்று சொன்னார் முதலமைச்சர் அவர்கள்.

பல நேரங்களில் தனது பிறந்தநாளையே கொண்டாடாமல் தவிர்த்தவர்தான் கலைஞர் அவர்கள். ஈழப்பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் பலமுறை தலைவர் கலைஞர் அவர்கள் இப்படிச் செய்துள்ளார்கள். பிறந்த நாளின் போது வசூலான பணத்தை ஈழப்போராளி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்தார். (1986) கலைஞர் அவர்கள். 1988 ஆம் ஆண்டு பிறந்தநாள் செய்தியாக, 'இந்திய ராணுவத்தால் பிரபாகரனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தக் கூடாது. போர் நிறுத்தம் செய்து உடனடியாக சுமூக நிலைக்கு வழிகாண வேண்டும் என்றும் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். இதுதான் எனது பிறந்த நாள் செய்தி' என்று அறிவித் தார் கலைஞர் அவர்கள். எனவே, கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர விபத்துக்காகத் தள்ளி வைத்ததுகூட கலைஞருக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமைந்திருந்தது.

”தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கலைஞரின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்”.. முரசொலி!

3 ஆம் தேதி நடப்பதாக இருந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா 7 ஆம் தேதி வடசென்னை பகுதியில் பின்னி மில் வளாகத்தில் மாநாடு போல நடத்தப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபுவால் நடத்தப்பட்டது நூற்றாண்டு விழா, அல்ல தொடக்க விழா மாநாடு. "75 ஆண்டுகளுக்கு முன்பு, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விதை போட்ட பகுதியில் கொள்கை வேர் பரப்பி ஆல் போல் தழைத்து இருக்கும் இந்த இயக்கத்தை வளர்த்துக் காட்டிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்போடு, நான் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமானதாக நடத்திக் காட்டி இருக்கிறார் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ‘செயல்பாபு' என்று என்னால் எப்போதும் அழைக்கப்படும் மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள்.” என்று தலைவர் அவர்கள் மேடை யிலேயே பாராட்டினார்கள். கலைஞரின் விஞ்சுபுகழ் அனைத்தை யும் நெஞ்சுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்து மனக்கண் முன்னால் நிறுத்தியது இந்த தொடக்கவிழா மாநாடு.

தொண்டர்கள் படைசூழ. தோழமைக் கட்சித் தலைவர்கள் அணி சேர்க்க நடந்த விழா, அடுத்து வருகின்ற 12 மாதமும் எத்தகையதாக விழாக்கள் அமைய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

"ஓராண்டு முழுவதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை -அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கொண்டாட்டங்களின் மூலமாக தலைவர் கலைஞருக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழைச் சேர்க்கப் போகி றோம் என்பதல்ல; நாம் - நம் நன்றியின் அடையாளமாக கொண்டா டிக் கொண்டிருக்கிறோம்! “ என்று சொல்லி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். 'நன்றி என்பது செயல் செய்தவர்கள் எதிர் பார்க்க வேண்டியது அல்ல. பலன் பெற்றவர்கள் காட்ட வேண்டியது' என்பார் தந்தை பெரியார். அந்த வகையில் தலைவர் கலைஞர் அவர்களால் பலன் பெற்ற தமிழ்நாடு காட்ட வேண்டிய நன்றி அறிவிப்பு விழாக்களாகவே கலைஞரின் நூற்றாண்டு விழாக்கள் அமையப் போகின்றன. தோழமைக் கட்சித் தலைவர்கள் அனை வரும். ஐந்து முறை முதலமைச்சராக இருந்தபோதும் தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளைத்தான் அதிகமாக பட்டியலிட்டார்கள்.

”தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த கலைஞரின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்”.. முரசொலி!

சாதனைகளைச் செய்வதிலும் சாதனை படைத்தவர் கலைஞர். அவர் செய்த சாதனைகள், சொல்லி முடியாதவை. ஒரு துறை அல்ல. அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தார். ஒரு காலக்கட்டத் தில் மட்டுமல்ல. வாழ்ந்த காலம் முழுவதும் சாதனைகள் செய்தார். அகில இந்த அரசியலில் - மிக நீண்ட காலம் வாழ்ந்த தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஓய்வெடுத்துக் கொண் டார்கள். பதவிகளுக்கு வரும் போது மட்டுமே பரபரப்பாகக் காணப் படுவார்கள். ஆனால் கலைஞர் அவர்கள் தான் வாழ்ந்த காலம் முழுவதுமே ‘முதலமைச்சரைப் போலவே வாழ்ந்தார். ஒன்று அவர் செயலைச் செய்வார். அல்லது செய்ய வைப்பார். இந்த இரண்டு செயல்பாடுகளும் இருந்ததால் எப்போதும் அவர் தலைப்புச் செய்தி யாகவே இருந்தார். அவர் செய்த செயல்களை, திட்டங்களை நினைவூட்டினாலே போதும். அதனைத்தான் வலியுறுத்தி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மாநிலத்தை வளர்த்தெடுத்த தலைவருக்கு நானிலம் போற்றும் நன்றிநவிலும் விழாக்களாக அமையட்டும். அவர் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறக்கட்டும்!

banner

Related Stories

Related Stories