M K Stalin
ரூ.50 இலட்சம் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடுவுக்கு சிலை திறப்பு... எங்கு தெரியுமா?
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
=> அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தல் :
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2024-25ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு தந்த அறிவியல் மாமேதைகளில் ஒருவரும், இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும் கல்வியாளராகவும், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய ஜி.டி. நாயுடு அவர்களுக்கு கோயம்புத்தூரில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, கோயம்புத்தூர், அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
Also Read
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் பெயரையும் மாற்றும் த.வெ.க! : பெயர் மாற்றி ‘ஏமாற்றும்’ அவலம்!
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!