M K Stalin
“வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து அறிவுச்செயல்பாடுகளை முன்னெடுக்கும் இயக்கம் என்பது அனைவராலும் அறியப்பட்டதே.
அந்த வகையில், தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி முன்னெடுத்த ‘தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் மகத்தான நிகழ்ச்சியை நவ.08 அன்று கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் தொடக்க நாளில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியிடப்பட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ தலைப்பிலான கருத்தரங்கங்கள் நடைபெற்றன. மேலும் ஒருவார காலம் நடைபெற்ற ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.08 அன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், புத்தகக்காட்சியின் நிறைவு நாளான இன்று (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி சென்றார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,
“திமுக 75 அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!
வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.
குறிப்பாக, 'Carry on, but remember' எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்.
வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது இளைஞரணி தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!”
Also Read
-
“கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத்திருவிழா!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
SIR : போராட்டம்.. தற்கொலை.. BLO அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் வேலைப்பளு கொடுப்பதால் நேரும் கதி!
-
சிங்காரவேலர் கோயில் அர்ச்சகர் விவகாரம் : “அரசியல் சாயத்தை பூசிக்கொள்ளக் கூடாது!” - அமைச்சர் சேகர்பாபு !
-
பீகார் தேர்தல் : “பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியம்?” - பட்டியலிட்டு செல்வப்பெருந்தகை கேள்வி!
-
தினை வகைகளை கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்.. 3 நாட்கள் பயிற்சி.. எங்கு? விண்ணப்பிப்பது எப்படி?