M K Stalin

தருமபுரியில் நலனுக்காக... ரூ.1705 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர்!

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற  அரசு விழாவில் ரூ.1705.35 கோடி செலவிலான 1073 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
70,427 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

நேற்று 16.8.2025 பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மாலை சேலம் வந்தடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுமக்கள் விமான நிலையம் முதல் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவே தருமபுரி மாவட்டத்திற்கு வருகைதந்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இன்று (17.8.2025) தருமபுரி, தடங்கத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு செல்லும் வழியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டிற்கே முன்னோடி திட்டமான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.8.2025) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவிலான 1073 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

=> தருமபுரி மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், தருமபுரி மாவட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், தனிநபர் குடிநீர் இணைப்புகள், துணை சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார வளாகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், சிறுபாலங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கணினி அறைகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தார்சாலைகள், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூலாம்பட்டி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட தார்ச்சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 112 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் 928  முடிவுற்றப் பணிகள்;

பொதுப்பணித் துறை சார்பில், தருமபுரி பொதுப்பணித்துறை வளாகத்தில் 94 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக் கட்டடம், நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில் 70 இலட்சம் ரூபாய் செலவில் வருவாய் அலுவலர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடங்கள், நத்தமேடு அரசு மேல்நிலை பள்ளியில் 94 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் 4 வகுப்பறை கட்டடங்கள், கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வகுப்பறைக் கட்டடம், அமானிமல்லாபுரத்தில் 1 கோடியே 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளி கட்டடம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில் தாய் சேய் நலப் பிரிவு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் 20 கோடி ரூபாய் செலவில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் புதிய கூடுதல் மருத்துவக் கட்டடம், அரூர் அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் புதிய கூடுதல் மருத்துவக் கட்டடம், பாலக்கோட்டில் 4 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம், 45 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில்  ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொ.மல்லாபுரம் மற்றும் கம்பைநல்லூர் பேரூராட்சிகளில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் தார்சாலை, பென்னாகரம் பேரூராட்சியில் 2 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை, காரிமங்கலம் பேரூராட்சியில் 2 கோடியே 72 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில்  கூடுதல் வகுப்பறைக் கட்டடம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பொது சுகாதார கட்டடம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வளமீட்பு பூங்காவில் மேற்கூரையுடன் கூடிய வின்ட்ரோ பிளாட்பார்ம், காரிமங்கலம் பேரூராட்சியில் 77 இலட்சம்  ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாகல் ஏரி; மதிகோண்பாளையத்தில் 19 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நகராட்சி பள்ளி, பி.ஆர்.சுந்தரம் தெரு, நெசவாளர் காலனி மற்றும் டவுன் ஹால் ஆகிய இடங்களில் 7 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டணமில்லா கழிப்பறைகள்;

வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், அரூர் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தமலையில் 60 இலட்சம் ரூபாய் செலவில் துணை வேளாண் விரிவாக்க மையம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தளவாய்அள்ளியில் 60 இலட்சம் ரூபாய் செலவில் விதை சேமிப்பு கிடங்கு மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் நிறுத்துமிடம், பாலவாடி, பாடி, செம்மாண்டகுப்பம், பனைக்குளம் மற்றும் ஆண்டிஹள்ளி ஆகிய  ஊராட்சிகளில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் உலர்கலத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடங்கள்;

நெடுஞ்சாலைத் துறை சார்பில், தருமபுரி – பாப்பாரப்பட்டி சாலை, திருவண்ணாமலை – அரூர் வழி தானிப்பாடி சாலை, வாரணாசி – கன்னியாகுமரி சாலை, ஒகேனக்கல் – பென்னாகரம் – தருமபுரி – திருப்பத்தூர் சாலை, பாலக்கோடு – கேசர்குளி சாலை, அரூர் – தீர்த்தமலை சாலை, மல்லாபுரம் – கோபிநாதம்பட்டி சாலை, நல்லம்பள்ளி – மிட்டாரெட்டிஅள்ளி லளிகம் சாலை, பாப்பிரெட்டிப்பட்டி – மல்லாபுரம் சாலை,  பூதநத்தம் – வெங்கடசமுத்திரம் சாலை, நல்லம்பள்ளி – நாகர்கூடல், இண்டூர், கானாப்பட்டி சாலை, ரெட்டியூர் சாலை,  வி.சி.சி. சாலை – சிவாடி இரயில் நிலையம், பெயர்நாயக்கன்பட்டி – உட்டப்பட்டி தண்டா சாலை, ஜடையன்கோம்பை சாலை, எஸ்டி சாலை – மதியம்பட்டி சாலை, இ. மதியம்பட்டி சாலை, எஸ்டி சாலை – பொன்னியம்மன் கோவில் சாலைகள் ஆகிய இடங்களில் 139 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலைகள்;

வனத்துறை சார்பில், தடங்கம் - உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வரைதொழில் அலுவலர், இளநிலை கணக்கர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர், ஓட்டுனர், தலைமை எழுத்தர் ஆகியோருக்காக 2 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய செலவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, அரூர், பாலக்கோடு, ஒகேனக்கல், ஏ.ரெட்டிஅள்ளி ஆகிய இடங்களில் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் வனச்சரக அலுவலகக் கட்டடடங்கள், ஏ.ரெட்டிஅள்ளியில் 48 இலட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவில் வன ஓய்வு விடுதிக் கட்டடம், பாலக்கோட்டில் 22 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வேட்டை தடுப்பு முகாம் கட்டடம், மொரப்பூரில் 21 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் குடியிருப்புக் கட்டடங்கள்; 

பாலக்கோட்டில் 13 இலட்சம் ரூபாய் செலவில் வன விலங்குகளுக்கு குடிநீர் தேவைக்கான ஆழ்துளை கிணறு, மோட்டார் மற்றும் தொட்டி, பென்னாகரத்தில் 16 இலட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுர கட்டடம்,  தருமபுரி, அரூர், பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 39 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பெண் வனப்பணியாளர்களுக்கான கழிவறையுடன் கூடிய ஓய்வறைக் கட்டடங்கள், கீழ்காரப்பாடி, செங்கலேரி, கல்லடிப்பட்டி, தாதனூர் புதூர், இந்திரா நகர் ஆகிய இடங்களில் 85 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மலைவாழ் மக்களுக்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், தருமபுரியில் 1 கோடி ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தப்பட்ட ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், கோட்டப்பட்டி, ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 44 இலட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலவில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் நாற்றுகள் வளர்ப்பதற்கு தேவையான ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், நீரேற்றும் அறைகள்;

தாட்கோ சார்பில், குண்டல்மடுவு, கீரைப்பட்டி ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு மையக் கட்டடங்கள், நரிப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் 49 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள், வாச்சாத்தி மேல்நிலைப்பள்ளியில் 31 இலட்சம் ரூபாய் செலவில் கழிவறைக் கட்டடம், வெள்ளாளப்பட்டி, சிட்டிலிங், அம்மாபேட்டை, மருதிப்பட்டி,  பெரியப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 6 கோடியே 37 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம அறிவுசார் மையக்  கட்டடங்கள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் செலவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் தாய்சேய் நலப்பிரிவுக் கட்டடம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் 10 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடங்கள், பொ.மல்லாபுரம், ஏரியூர், மாரண்டஅள்ளி ஆகிய இடங்களில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் வட்டார பொது சுகாதார அலகுகள், எருக்கம்பட்டி, கொங்கவேம்பு, மெனசி ஆகிய இடங்களில் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், நாகதாசம்பட்டியில் 1 கோடியே 24 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்;

பொதுநூலகத் துறை சார்பில், பையர்நத்தம், மெனசியில் 44 இலட்சம் ரூபாய் செலவில் கிளை நூலக இணைப்பு கட்டடங்கள், வாழைதோட்டம், பாளையத்தானூரில்  44 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடங்கள்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், தருமபுரி, காரிமங்கலம், மொரப்பூர், கடத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள்,  அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 1 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் இருப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகள்;

பால்வளத் துறை சார்பில், அரூர் ஒன்றியம் – வேலம்பட்டி, காரிமங்கலம் ஒன்றியம் – கெங்குசெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் 20 இலட்சம் ரூபாய் செலவில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள்;

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில், அரூர் பேரூராட்சி – பழையப்பேட்டை, காரிமங்கலம் பேரூராட்சி - காமராஜ் நகர், சின்னமிட்டஅள்ளி ஆகிய இடங்களில் 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையக்கட்டடங்கள்;

என மொத்தம், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 1073 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்துவைத்தார்.

=> தருமபுரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் :

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், தருமபுரி அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடகத்தூர் மேல்நிலைப்பள்ளி, பங்குநத்தம்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு நுழைவாயில், அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக இ-சேவை மைய கட்டடத்திற்கு குடிநீர் வசதி, சுற்றுச் சுவர், பேவர் பிளாக் சாலை, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  இ-சேவை மைய கட்டடம், சுற்றுச் சுவர், பேவர் பிளாக் கல் பதித்தல் மற்றும் நுழைவு வாயில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம், தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளிட்ட பணிகள்;

புதிய துணை சுகாதார நிலையங்கள், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தார்ச்சாலைகள் மற்றும் சாலைகள் மேம்படுத்தும் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், சமத்துவ மயானம் மேம்படுத்துதல், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், தானியக்களங்கள், நீர்வடிகால் பணிகள், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதி திட்டத்தின் கீழ் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்; 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அரூரில் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ பிரிவுக் கட்டடம், பன்நோக்கு சிகிச்சை பிரிவுக் கட்டடம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வள்ளி மதுரையில் துணை சுகாதார நிலையக் கட்டடம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், நாகதாசம்பட்டி, வேப்பிளைஅள்ளியில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், நூலஅள்ளியில் துணை சுகாதார நிலையக் கட்டடம்;

பட்டு வளர்ச்சித் துறை சார்பில், சோகத்தூரில் ஒருங்கிணைந்த பட்டு சேகரிப்பு வளாகக் கட்டடம்;

உயர்கல்வித் துறை சார்பில், பென்னாகரம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடங்கள்; 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கடத்தூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், பேடரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைக் கட்டடங்கள், தாதநாயக்கன்பட்டி, ஆலாபுரம், நாகர்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 4 வகுப்பறைக் கட்டடங்கள், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைக் கட்டடம், வத்தல்மலை பெரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைக் கட்டடம், கே.ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஆழ்துளை கிணறு மற்றும் ஆண், பெண் கழிவறைக் கட்டடம், சோலைக்கொட்டாய், பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள், ஆர்.கோபிநாதம்பட்டி, நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச் சுவர், பி.கொல்லப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறைக் கட்டடங்கள், அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள், குண்டகானூர், தும்பளஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 7 வகுப்பறைக் கட்டடங்கள்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொ.மல்லாபுரம், காரிமங்கலம் பேரூராட்சிகளில்குடிநீர் மேம்பாடுப் பணிகள் காரிமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிறுத்தத்துடன் கூடிய தற்போதைய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குதல், கால்நடை சந்தை, அரூர் பேரூராட்சியில் அறிவுசார் மையம், பென்னாகரம் பேரூராட்சியில்  வார்டு எண். 2, 3, 7, 13, 14-ல் பேவர் பிளாக் சாலைகள், வார்டு எண். 6, 15-ல் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலைகள் பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு எண்.1,2,6, 16-ல்  பேவர் பிளாக் சாலைகள் உள்ளிட்ட பணிகள்;

தருமபுரி நகராட்சி வார்டு எண்.32, 33 மற்றும் 30-ல் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், வார்டு எண்.09 - உழவர் சந்தையில் 16 கடைகள், வார்டு எண்.09 - கிருஷ்ணகிரி மெயின் ரோடு பகுதியில் புதிய நவீன பயணியர் நிழற்கூடம், வார்டு எண்.23 மற்றும் 33 - இராஜகோபால் பூங்கா அருகில் மற்றும் அன்னசாகரம் பகுதிகளில் 20,000 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள்;

கூட்டுறவுத் துறை சார்பில், திப்பிரெட்டிஅள்ளி, என்.எஸ்.ரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து புதிய அலுவலகங்கள், சிட்லிங் லேம்ப்  மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து  புதிய அலுவலகம்;

வேளாண்மைத் துறை சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தேவராஜபாளையத்தில் ஒருங்குமுறை விற்பனைக்கூடம்;

நீர்வளத் துறை  சார்பில், கெண்டேனஹள்ளி கிராமத்தில் நாகாவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, நாகாவதி அணையின் அவசரகால மதகு மற்றும் நேரடி பாசன மதகு கதவுகளைப் பழுதுபார்த்தல் மற்றும் மாற்றுதல், தும்பலஅள்ளி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய் மதகின் கதவுகளை மாற்றுதல், ஈச்சம்பாடி அணையின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களைப் புனரமைக்கும் பணிகள், வாணியாறு அணையின் ஷட்டரை புதுப்பித்தல், நல்லம்பள்ளி - தொப்பையாறு அணையின் வழிந்தோடி மதகிற்கான விசைப்பொறி மற்றும் தடைக்கட்டைகள் மாற்றுதல்;

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை - அரூர் (வழி) தானிப்பாடி சாலை மற்றும் தருமபுரி - அரூர் (வழி) மொரப்பூர் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்குவழித்தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், குறுக்கு வடிகால் கட்டுதல், அகலப்படுத்துதல், சாலை சந்திப்பினை மேம்பாடு செய்தல், கல்வெர்ட்டினை அகலப்படுத்துதல், சாலை மைய தடுப்புசுவர் அமைக்கும் பணிகள், பாப்பாரப்பட்டி புறவழிச்சாலை தருமபுரி – சிவாடி இரயில் நிலையங்களுக்கிடையில் சாலை மேம்பாலம் மற்றும் இரயில்வே இலகுரக சாலை மேம்பாலம்;

தொல்லியல் துறை சார்பில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டையில் நடுகற்கள் அகழ்வைப்பகம்;

வனத்துறை சார்பில், தருமபுரி வனச்சரகத்தில் உள்ள தொப்பூரில் வனக்காவலர் குடியிருப்பு ஒகேனக்கல் வனச்சரகத்தில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி மற்றும் நீரேற்றும் அறை;

தாட்கோ சார்பில், பாலக்கோடு வணிக வளாகக் கட்டடம், தருமபுரி சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் கற்றல் கற்பித்தல் கூடம், காரிமங்கலம் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் கூடம், தருமபுரி சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக்கான புதிய விடுதிக் கட்டடம்;

என மொத்தம்,  512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1044 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார். 

=> தருமபுரி மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் :

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 40,595 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள், 133 பயனாளிகளுக்கு சாலை விபத்து நிவாரணம், 132 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் திருமண உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில், 30 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், 6 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்புப்பெட்டிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 42 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 1000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், அரசு கேபிள் டி.வி சார்பில், 246 பயனாளிகளுக்கு எச்.டி. செட்அப் பாக்ஸ் (HD Setup Box), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 7,485 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம், 3,063 பயனாளிகளுக்கு ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் உதவிகள், 337 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டன் கீழ் உதவிகள்; 

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 20 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், கூட்டுறவுத் துறை சார்பில், 2010 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், பயிர் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள், மகளிர் திட்டம் சார்பில், 3011 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு வங்கி கடன் இணைப்புகள், வேளாண்மை – உழவர் நலத் துறை சார்பில், 2981 பயனாளிகளுக்கு வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம், சிறுதானிய செயல்விளக்க திடல், பயறுவகை செயல்விளக்கத் திடல், எண்ணெய் வித்துக்கள் செயல் விளக்கத் திடல், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள், தோட்டக்கலைத் துறை சார்பில்,  500 பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசன கருவிகள்; 

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 200 பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டம், பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு மாற்றாக மானியத்தில் புதிய மின் மோட்டார் வழங்குதல், பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரமயமாக்குதல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அமைத்தல், சூரிய சக்தியில் இயங்கும் மின் வேலிகள், வனத்துறை சார்பில், 504 பயனாளிகளுக்கு தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 128 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மீன்வளத் துறை சார்பில், 180 பயனாளிகளுக்கு நலவாரிய அடையாள அட்டைகள், பரிசல் சான்று, கூட்டுறவு உறுப்பினர் சேர்க்கை அட்டைகள், பழங்குடியினர் நலத்துறை சார்பில், 378 பயனாளிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் தனி நபர் பட்டா வழங்குதல், நல வாரிய அட்டைகள் வழங்குதல், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை,  தாட்கோ சார்பில்,  326 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், தொழில் முனைவு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்; 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 800 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 106 பயனாளிகளுக்கு கலைஞர் கைவினைத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய தொழில் முனைவோர் தொழில் உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 5,390 பயனாளிகளுக்கு பணியிடத்து விபத்து மரணம், இயற்கை மரணம், விபத்து மரணம், திருமணம், கல்வி உதவித் தொகைகள், வீட்டுவசதி திட்டம், முதியோர் ஓய்வூதியத் தொகை, புதிய பதிவு அட்டை வழங்குதல், சமூக நலன் துறை சார்பில், 143 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 35 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், 120 பயனாளிகளுக்கு நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் உதவிகள் என பல்வேறு துறைகளின் கீழ் உதவிகள்;

என மொத்தம் 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 70,427 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் வழங்கினார்.

Also Read: ”பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்கு சென்று கம்பு சுற்றுங்கள்” : ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!