M K Stalin
"தூறும் மழை.. சூடா காபி.." குடை பிடித்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை ரசித்த முதல்வர் !
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 3 பிரிவில் 30 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, போட்டியை காணவரும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பரமபரிய கலாச்சாரம் நிறைந்த காலை நிகழ்ச்சிகளுக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையான பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட சிறப்பு கலைகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சிறிதளவு மழை பெய்ததால், முதல்வர் தனது கைகளால் குடையை பிடித்துக்கொண்டு, சூடாக காபி குடித்துக்கொண்டே கலை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக, நேற்று இரவு சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் தொலைபேசி மூலம் குறைகளையும் கேட்டறிந்தார்.
அவர்களிடம் பேசிய முதலமைச்சர், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துவிட்டதா என்றும், தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!