தமிழ்நாடு

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,80,000 கன அடி நீர் நேற்று (05.08.2022) முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வெளியேற்றப்படுவதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னதாக பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி, கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 4) ஆலோசனை மேற்கொண்டார்.

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

இந்த நிலையில், நேற்று உபரி நீர் திறக்கப்படுவதற்கு முன்பு பாதிக்கப்படும் கரையோர மக்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. அதன்படி அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர், நீர் திறக்கப்பட்டது. நீர் வெளியேற்றப்பட்டதால் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அதே போல் நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

மேலும் அரியலூரில் 200 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். அதோடு, வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளில் பேரிடம் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் தொலைபேசி மூலம் குறைகளையும் கேட்டறிந்தார்.

"வீட்டுக்குள்ள தண்ணி போய்டுச்சா.. உணவு, மருந்துலாம் கிடைக்குதா?" - மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர்!

அவர்களிடம் பேசிய முதலமைச்சர், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துவிட்டதா என்றும், தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories