M K Stalin
அனைத்து கட்சி கூட்டத்துக்கு எல்லோரையும் அழைத்திருக்க வேண்டாமா?: பேரவையில் ஸ்டாலின் கேள்வி!
“மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கட்சியினரையும் 10% இடஒதுக்கீடு குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைத்திருக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
கடந்த ஜூலை 8ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து நேற்று சட்டமன்றத்தில் பேசினார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் பேசியதாவது :
முக்கியமான பிரச்னை பற்றி விவாதிக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நியாயமாக முதலமைச்சர் வந்திருக்க வேண்டும். நேற்றைக்கு நான் அந்தக் கூட்டத்தில் அதைப் பற்றி பேசியிருந்தால் பிரச்சினைகள் வேறு மாதிரி திசை நோக்கிப் போயிருக்கும் என்பதற்காக அதைப் பற்றிப் பேசவில்லை. இருந்தாலும், மற்ற கட்சிகளைச் சார்ந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஐ.ஜே.கே, கொங்கு நாடு மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி போன்றவை ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள், இருந்தவர்கள். ஜான் பாண்டியன் கட்சி வந்திருக்கின்றது. புதிய பாரதம் கட்சியின் உறுப்பினர்களும் வந்திருக்கின்றார்கள். அவர்களை அழைத்ததை நான் தவறு என்று சொல்லவில்லை, அவர்கள் எல்லோரும் அழைக்கப்படுகின்றபோது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளாக இருந்தவர்கள், இருக்கக்கூடியவர்களும் அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
குறுக்கீடு செய்த அமைச்சர் செல்லுார் ராஜூ மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதாகவும், அதனை சபாநாயகர் நிறுத்தவேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “நான் பலமுறை முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரை சொல்வதை பெரும்பாலும் தவிர்த்திருக்கின்றேன். பல நேரங்களில் சொல்லவேண்டிய அவசியம் வருகின்ற போது சொல்லுகின்றேன். அதை சொல்லுவது ஒன்றும் தவறில்லை. நீங்களும் எத்தனையோ முறை எங்களுடைய தலைவர் கலைஞர் அவர்களின் பெயரை சொல்லியிருக்கின்றீர்கள். நீங்கள் அவைக்குறிப்பு எடுத்துப் பாருங்கள், பலமுறை சொல்லியிருக்கின்றீர்கள். அதுகூட சட்டப்படி தவறு என்று நான் சொல்லவிரும்பவில்லை. அதை ஒரு மரபாக நாம் கடைபிடித்துக் கொன்டிருக்கின்றோம்.
எனவே, மறைந்த தலைவர்கள் காமராஜரின் பெயரைச் சொல்கின்றோம், ராஜாஜி அவர்களின் பெயரைச் சொல்கின்றோம், எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரைச் சொல்கின்றோம், எனவே இதெல்லாம் தவறில்லை கலைஞர் அவர்களின் பெயரைக்கூட நீங்கள் எல்லோரும் சொல்கின்றீர்கள். அது தவிர்க்க முடியாத சூழலில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எனவே, அதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதைத்தான் நான் தங்களிடம் அறிய விரும்புகின்றேன்.” இவ்வாறு அவர் பேசினார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!