jallikattu
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : கடைசி வரை இழுபறி... இறுதியாக 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (16.01.2024) மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். மேலும் முதலிடத்தை பிடித்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரும், வெற்றி பெற்ற காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெறும் வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரமும், வெற்றி பெறும் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் வாடிவாசலில் இருந்து முதலாவது முனியாண்டி கோவில் சாமி கோவில் அவிழ்க்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக அரியமலை கெங்கையம்மன் கோவில் காளை அவிழ்க்கப்பட்டது. இந்த போட்டியின் முதல் சுற்றில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் கலந்துகொண்ட நிலையில், அடுத்து வந்த ஒவ்வொரு சுற்றிலும் காளைகள், காளையர்கள் குறைவாகவே களமிறங்கினர்.
இந்த சூழலில் இந்த போட்டியின் 9-வது சுற்றில் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர், கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக், குன்னத்தூரை சேர்ந்த திவாகர் ஆகிய 3 மாடுபிடி வீரர்களும் 11 காளைகளை அடக்கி சம பலத்தில் இருந்ததால் இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து இந்த இறுதிச்சுற்றில் 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல் 17 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் இரண்டாம் இடமும், 12 காளைகளை அடக்கி குன்னத்தூரைச் சேர்ந்த திவாகர் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு அமைச்சர் பி.மூர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் காரை பரிசாக வழங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2022 ஆம் ஆண்டு கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசும், 2023 ஆம் ஆண்டு பூவந்தி அபிசித்தர் முதல் பரிசும் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!