India
பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை : காரணம் என்ன?
மகாராஷ்டிர மாநில பா.ஜ.க அமைச்சர் நிதேஷ் ராணே, 2019 ஆம் ஆண்டு மும்பை-கோவா நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது சாலையின் தரம் மோசமாக இருப்பதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுள்ளார்.
அப்போது திடீரென அமைச்சர் நிதேஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர் அங்கிருந்த சேற்று நீரை, அதிகாரி பிரகாஷ் ஷெடகர் மீது ஊற்றி அவரை அவமானப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அதிகாரி நீதிவமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு சிந்துதுர்க் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நடந்து வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி வி.எஸ்.தேஷ்முக்,அரசு ஊழியரை பொதுவெளியில் இழிவுபடுத்தியது குற்றமெனக் கூறி அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக்கூடாது என்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசு ஊழியர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Also Read
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Delimitation : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய திட்டம்!