India
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
இந்திய எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் அருகில் சீனா தனது எல்லைப் பகுதியான திபேத் மாகாண த்தில் ஓடும் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைத்து வருவதாகவும், அதனால் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பேரழிவு விளைவிக்கும் ய ஆபத்து உள்ளதாகவும் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா?
அப்படியானால் , இந்த அணைத்திட்டத்துக்கு இந்தியாவின் எதிர்ப்புகள் சீன அரசிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதா? அதன் விவரங்கள் என்ன? என பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டிவரும் பிரம்மாண்ட மான அணை குறித்த கேள்வியை திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத் தொடரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இந்த கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
திபேத் பகுதியில் யார்லுங்க் சாங்க்போ நதியில், அதாவது பிரம்மபுத்ரா ஆற்றின் மேலோடைப் பகுதியில் மிகப்பெரிய அணை கட்டும் பணிகளை சீன அரசு தொடங்கிய செய்திகளை இந்திய அரசு தன் கவனத்தில் கொண்டுள்ளது.
இந்த அணை தொடர்பான தகவல்கள் 1986 ஆம் ஆண்டு தொட்டே வந்த வண்ணம் உள்ளன. எனவே, அப்போதிருந்தே இந்த திட்டத்தின் கீழ் அமைய உள்ள புனல்மின் உற்பத்தி நிலையம் பற்றிய தகவல்கள், மற்றும் அணைக் கட்டமைப்பினால் கீழோடையான பிரம்மபுத்ரா பாயும் இந்திய நிலப் பகுதிகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்தும் அரசு கண்காணித்து வருவதுடன் , இந்திய மக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் அவர்தம் வாழ்வாதாரங்கள் மீதான தாக்கத்தை எல்லாண் எதிர்கொள்ளவும் உரிய திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற எல்லை கடந்த நதிகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள நதியின் கீழோடைப் நிலப் பகுதி வாழ் மக்களின் நிலைநாட்டப் பட்ட நதிநீர் உரிமைகள் குறித்த இந்திய அரசி்ன் கலலைகள் அனைத்தும் சீனாவிடம் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக 2006 ஆம் ஆண்டில் நிறுவன ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு இருநாடுகளின் "நிபுணர்கள் நிலை அமைப்பு"( Institutionalised Expert Level Mechanism)வாயிலாகவும் தூதரக த் தொடர்புகள் மூலமாகவும் இந்த பிரச்சினை சீன அரசுடன் பலமுறை விவாதிக்க ப் பட்டுள்ளன.
மேலும், சென்ற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, சீனாவில் உள்ள டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ( ஷாங்காய் கோ ஆபரேஷன் ஆர்கனைசேஷன் ) கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீன அதிபர் திரு. ஜீ ஜிங்க் பின் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் இந்த அணை தொடர்பான பிர்சினையையும் இந்திய அரசி்ன் கவலை குறித்தும் எடுத்துரைத்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
-
“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!