
மேகதாது அணைக் கட்டும் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மிகவும் கேள்விக்குறியானதாக இருந்து வருகிறது. குறிப்பாக தவெக அரசும் முதலமைச்சர் விஜயும் தமிழ்நாட்டின் நிலையை ஆணித்தரமாக கர்நாடக அரசுக்கு தெரிவிக்காமல் இதில் மவுனம் காத்துவருவது தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
குறிப்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அங்கு செல்ல இருப்பதாக, வேளாண் அமைச்சர் வினோத் தெரிவித்தது குறித்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி, அறிவுரைகளையும் வழங்கி இருந்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






