India
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக மீண்டும் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக பாலஸ்தீன மக்கள் பெருமளவு பாதிப்புக்குளாகியுள்ளனர்.
இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், போரை நிறுத்த பல நாடுகள் முன்வந்தன. மேலும் உலக அளவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பல நாடுகள், மக்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கேரளாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக அரசு பள்ளி மாணவர்கள் மைம் நாடகத்தை நடத்திய நிலையில், அதனை 2 ஆசிரியர்கள் தடுத்து நிறுத்திய விவகாரம் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசா்கோட்டில் அமைந்துள்ள கும்ப்ளா பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடந்த அக்.03-ம் தேதி கலை விழா நடைபெற்ற நிலையில், அந்த பள்ளி மாணவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மைம் நாடகத்தை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர்களில் 2 பேர் அந்த நாடகத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மேடைத் திரையையும் மூடினர். இந்த சம்பவம் வெளியே பரவியதையடுத்து ஆசிரியர்களுக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் இந்த செயலுக்கு எதிராக மாணவர்கள் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் நாடகத்தை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி, "இந்த விவகாரம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்கள். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தும் அட்டூழிய தாக்குதலுக்கு எதிராகதான் கேரள அரசும் இருக்கிறது. எனவே மாணவர்களின் இந்த மைம் நாடகம் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!